அனைவருக்கும் அரசு வேலை (Government Job)என்பது எல்லோருக்கும் உள்ள கனவு.
அந்த கனவை நினைவாக்க பலரும் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம்(TamilNadu Public Service Commission) நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து வெல்ல வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அத்தகையவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
TNPSC வினாத்தாளில் “பொருத்துக” (matching)அல்லது பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க” என்ற தலைப்பின் கீழ் கேட்க்கப்படும் வார்த்தைகளையும்(Words) அதற்கான பொருளையும்(Meaning) கீழே கொடுத்திருக்கிறேன்.
கீழிருக்கும் சொற்களையும், அவற்றிக்கான பொருளையும் நன்றாக படித்து புரிந்துகொண்டால் போதுமானது. மிகவும் எளியதாக இருக்கும் இந்தப் பகுதியிலிருந்து 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை பெறலாம்.
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்.
| |
சொல்
|
பொருள்
|
விண்
|
வானம்
|
மெய்
|
உண்மை, உடம்பு
|
கசடு
|
பழுது, குற்றம்
|
தக
|
பொருந்த
|
இழுக்கு
|
குற்றம். பழி
|
பெருமை
|
சிறப்பு, உயர்வு
|
சிறுமை
|
தாழ்வு
|
இன்மை
|
வறுமை
|
நக
|
மலரும்படி
|
குருகு
|
பறவை, நாரை
|
விசும்பு
|
வானம்
|
திங்கள்
|
நிலவு
|
மறு
|
குற்றம்
|
கொம்பு
|
மரக்கிளை
|
அகம்
|
உள்ளே
|
கடக்க
|
வெல்ல
|
மதகு
|
மடை
|
அறு
|
நீங்கு
|
கவை
|
மரங்கிளை பிளப்பு
|
செயல்
|
அறிவு
|
துணை
|
அளவு
|
பனை
|
பனைமரம்
|
ஏர்
|
கலப்பை, அழகு
|
தொழுது
|
வணங்கி
|
வரை
|
மலை
|
அரம்பை
|
வாழை
|
குழவி
|
குழந்தை
|
நேயம்
|
அன்பு
|
பங்கயம்
|
தாமரை
|
குரம்பு
|
வரப்பு
|
கவின்
|
அழகு
|
ஈட்டம்
|
தொகுதி
|
சித்தம்
|
மனம்
|
சீர்
|
செல்வம், சிறப்பு
|
சீற்றம்
|
கோபம்
|
மாறு
|
எதிர்ப்பு
|
எழில்
|
அழகு
|
மருங்கு
|
பக்கம்
|
அறம்
|
நீதி
|
அற்று
|
இல்லாத
|
புறம்
|
வெளி
|
மதி
|
சந்திரன்
|
நாதம்
|
ஒலி
|
முகில்
|
மேகம்
|
தமிழ்.. தமிழ்.. தமிழ்.. !!!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்... என்ற நிலை வரவேண்டும் என்று நம்முன்னோர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழறிஞர்கள் நினைத்த கனவை நிறைவேற்றுவோம், தமிழருடன் தமிழில் பேசுவோம்..
தாய் தமிழாம் தமிழை, செம்மொழியை தரணியில் ஏற்றமடையச் செய்வோம்.
தமிழராய்ப் பிறந்ததில், ஒவ்வொரு தமிழருக்கும் இந்தக் கடமை இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!!
இது போல இன்னும் நிறைய நூற்றுக்கணக்கான வார்த்தைகள்(Hundreds of words) இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஒரே பதிவில் வெளியிட முடியாததால், நேரமிருக்கும்போது பகுதி, பகுதியாக வெளியிடுகிறேன். நன்றி..!!!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...