Thursday, 5 July 2012

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது.


நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன.  வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன.  எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம்.  எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது.  எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார். 'பார்த்தா, எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது! ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்'

கீதை உபதேசம்
எனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும்.


நாம் நம்முடைய ஆற்றலை, அறிவை கவனத்தைச் சிதறவிடாது ஒரே செயலில் செலுத்தினால் மட்டுமே அதில் வெற்றபெற முடியும்.

நியூட்டன் என்னும் சிறுவன் ஒரு நாள் காலையில் தனது தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவன் ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். திடீரென அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பில் அவன் மீது விழுந்தது.

நாமாக இருந்தால் என்ன செய்வோம். ஆகா! இந்தப் பழம் இனிக்கும் என்று உடனே அதை சாப்பிட்டுவிட்டு, ஆப்பிளை பற்றியே மறந்துவிடுவோம்.

ஆனால் அந்தச்சிறுவனோ, 'இந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்? மேலே ஏன் செல்லக்கூடாது? என்று விநோதமாகச் சிந்தித்தான்.

தனது மனம், எண்ணம், செயல் மூன்றையும 'ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது' என்று பல காலம் மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தான். இயற்கையும் அந்த சிறுவனின் விடாமுயற்சிக்குப் பணிந்து தனது இரகசியத்தை அவனுக்கு விளங்க வைத்து.  அதனால்தான் "பூமிக்கு கீழே இழுக்கும் ஆற்றல் (Gravitaion) உண்டு. என்ற தனது புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு கொடுத்தார். அந்தச் சிறுவன்தான் சர். ஐசக் நியூட்டன். அவரது கண்டுபிடிப்புதான் மற்ற கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

சாமுவேல் ஜான்சன்
எனவே நாம் நம்மைச் சுற்றி தினமும் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும், கூர்மையாக மனம் ஒருமைப்படுத்தி (Concentration ) பார்த்தோமேயானால், நமது வெற்றிக்கான அடித்தளம், தானாகவே நமக்குத் தெரியும்.

ஒரு ஊசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு முனை கூர்மையாக இருப்பதால்தான் மட்டுமே அதனால் துணிக்குள் நுழைந்து தைக்க முடிகிறது. ஆனால் அதே ஊசியின் பின்புறம் கொண்டு நீங்கள் எதுவுமே செய்ய முடியாததற்கு காரணம்? நமக்குத் தெரிந்ததுதான்.. முனை கூர்மையில்லாததுதான்.

எனவே நமது எண்ணங்களைக் குவித்து, அதை ஊசிமுனை மாதிரி கூர்மையாக வைத்துக்கொண்டால் தான் நமது இலட்சியங்கள் எல்லாம் நிறைவேறும். அதை விட்டு விட்டு இலட்சியம், இலட்சியம் என்று கூறிக்கொண்டே வெறுமனே செயலாற்றுவதில் பயன் ஒன்றும் ஆகப் போவதில்லை.

மனிதன் சந்தர்ப்பங்களின் படைப்பு அல்ல. வெற்றி பெறும் மனிதன், சந்தர்ப்பங்களைத் (வாய்ப்புகளை) தானே படைத்துக்கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.

ஊசி நூல்
ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் என்ற மேதை மிகமிக வறுமையில் வாடியவர்தாம். அவரால் எப்படி உலகத்தின் புகழ்பெற்ற முதல் ஆங்கில அகராதியை எழுத முடிந்தது. அவரது தணியாத இலக்கியக் காதல் தான் அதற்குக் காரணம். தான் கொண்ட இலட்சியத்தின் மீது கொண்ட பிடிவாத்த்தால்தான்.  பலவருட காலம் உழைத்து உலகத்தாருக்கு ஒரு அகராதியை வழங்க முடிந்தது.!!!

சாமுவேல்ஸ் டிக்னரி

ஒரிஜினல் சாமுவேல் டிக்னரியின் முதல் பக்கம்.

நன்றி நண்பர்களே.. வேறொரு தன்னம்பிக்கை, தன்னம்பிக்கையாளர் பதிவின் மூலம் சந்திப்போம்..பதிவைப்பற்றிய தங்களுடைய கருத்துகளையும் எண்ணங்களையும் எழுதலாம். பதிவை தங்கள் நண்பர்கள் மற்றும் திரட்டிகளில் பகிருவதன் மூலம் பலரையும் சென்றடைய உதவுங்கள்.

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...