டைனோசர்கள்
பூமியில் வாழ்ந்த பிரமாண்டமான விலங்கினம். கால நிலை மாற்றங்களால் இந்த
டைனோசர்கள் இறப்புக்கு வேறு ஒரு காரணம் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
பலவகை டைனோசர்களில் சாரோபோட் என்னும் தாவரம் உண்ணும் டைனோசர் வகை மிகவும் பிரபலம். டைனோசர்களின் உடலமைப்பு, வேட்டையாடுதல், உணவு வகை பற்றி ஜூராசிக் பார்க் படத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த படத்தில் தாவரம் உண்ணும் டைனோசர்களின் கழுத்து ஒட்டகச்சிவிங்கி போல மேல்நோக்கி இருப்பதாக காட்டப்படும். ஆனால் சமீபத்திய ஆய்வில், டைனோசர்கள் கழுத்து கிடைமட்டமாகவோ அல்லது தொங்கப் போட்டுக் கொண்டோ உயிர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
இதன் நீண்ட கழுத்து பகுதிதான் உணவை, பறித்து தின்ன ஏதுவாக இருப்பதை அறிவோம். இதனுடைய கழுத்து 33 அடி முதல் 46 அடி வரை இருந்திருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் இந்த உயரத்துக்கு எழும்பி சென்றுவர மற்ற விலங்கினங்களைவிட 7 மடங்கு நேரம் ஆகும் என்று தெரிய வருகிறது. இந்த அதிக இடைவெளியே ரத்த அழுத்தம் குறைந்து, அதன் அழிவுக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்து கூறுகிறார்கள்.
அரியலூர் அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் முட்டைகள். இங்கு 40 முட்டைகள் வரை கண்டெடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மண்ணுக்குள் புதைந்து, கிட்டதட்ட கல்லாக மாறிய டைனோசரின் முட்டைகளைத் தான் கீழே காண்கிறோம்.
![]() |
டைனோசர்-முட்டைகள்(புதைபடிமங்கள்) |
ஆய்வு குறித்து விஞ்ஞானி சேய்மோர் கூறும்போது, "பொதுவாகவே எந்த உயிரினமும் தலையை உயர்த்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். டைனோசர்களும் உணவுக்காக தலையை உயர்த்தும்போது ரத்தம் அழுத்தம் மிக உயர்வாக இருந்திருக்கும். இதனால் அதிகமான சக்தியும் விரயம் செய்யப்பட்டது.
உணவு தேடும் நேரத்தில் அவைகள் 70 முதல் 90 டிகிரி வரை தலையை உயர்த்தும். பின்னர் சாதாரண நிலையில் 30 டிகிரி அளவுக்கு கிடைமட்டமாக கொண்டு வரும். இதனால் ரத்த ஓட்டத்தில் சீரற்ற நிலையும், அதிக சக்தி விரயம் ஏற்பட்டு அவற்றின் அழிவு ஏற்பட்டிருப்பதாக கணித்து உள்ளோம்.
![]() |
டைனோசர் புதை படிமங்கள் |
85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ள இவை 100 டன் எடை கொண்டது.. 110 அடி நீளம் உடையது இதன் உயரம் நீண்ட கழுத்து பகுதியையும் சேர்த்து 54 அடி வரை இருப்பது வியப்புக்குரியது.
இனிமேல் குழந்தைகள் டைசோனரை வரையும்போது தலைதாழ்த்தி (கிடைமட்டமாக) வரைந்து பழக வேண்டும். இதுதான் உண்மையான இயற்கையான டைனோசரைக் குறிப்பதாக இருக்கும்.
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...