இணையத்தில் உலவும் டி.என்.எஸ் சேஞ்சர் என்ற
வைரஸ் இணையத்தை முடக்கி கணணியை செயலிழக்கச் செய்து விடும் என்ற தகவல்
இணையதள உபயோகிப்பாளர்களிடம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.இது
புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள்
தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும்
9ம் திகதி செயலிழந்து விடும் என்கின்றனர் கணிப்பொறி வல்லுனர்கள்.
டி.என்.எஸ்(டொமைன் நேம் சிஸ்டம்) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணணிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது.தற்போது டி.என்.எஸ் சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயலிழக்கச் செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர்.இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கணணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு (எப்.பி.ஐ) மாற்று சர்வரை நிறுவியது.
இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9ம் திகதி செயல்பட தொடங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கணணிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியுங்கள்: எனவே டி.என்.எஸ் சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய நீங்கள் www.dns-ok.us இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும். வைரஸ் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.
பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9ம் திகதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இணையதள உபயோகிப்பாளர்கள்.வைரசை முற்றிலுமாக அழிக்க: ஒருவேளை உங்கள் கணணி பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணணியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது.விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணணியிலிருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான “அவிரா” ஒரு புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.டவுன்லோட் ஆகியதும் “exe” பைலை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணணி பாதுகாப்பாக உள்ளது.
எனவே இந்த மென்பொருள் உங்கள் கணணியில் இன்ஸ்டால் ஆகாது. ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணணியிலிருந்து அழித்து விடும்.மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணணிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.
DNS Resolution = GREEN
Your computer appears to be looking up IP addresses correctly!


No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...