சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் பள்ளிச்சிறுமியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குறும்படம் இது.
வணக்கம் நண்பர்களே..!
சமூக சிந்தனை, சமூக சேவை(Social Services), இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொண்டு நிறுவனங்கள்(NGOs) பல இருக்கின்றன. சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இவர்களெல்லாம் வேலைவெட்டி இல்லாதவர்களா? இவர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருக்கிறீர்களா?
என்றாவது ஒருநாள் இவர்களைப் பற்றிய சிந்தனை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?
பொதுச்சேவை என்பது என்ன? நமது சுற்றுப்புறச்சூழலை காப்பதும் ஒரு பொது சேவைதான். உங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுதலைத்(Environmental Pollution) தடுக்க என்றேனும் எண்ணியதுண்டா?
சமூக விரோதிகளிடமிருந்து(social enemies) பொதுச் சொத்துகளை பாதுகாத்திருக்கிறீர்களா?
இவையெல்லாம் செய்திருந்தால் நீங்கள் ஒரு சமூக சேவகர்தான். மேற்குறிப்பிட்ட சமூகச் சிந்தனையுடன், சமூகத் தொண்டாற்றும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை தடுக்கும் முகமாக குறும்படத்தை காண நேர்ந்தது.
நான் பெரிதும் ரசித்துப் பார்த்த குறும்படம் இது..
படத்தில் ஒரு சிறுமிதான் கதாபாத்திரம். சிறுமியின் பெயர் பச்சையம்மாள். குறும்படத்தின் பெயர் "பச்சை நிறமே".
தலைப்பை பார்த்தவுடனேயே இது என்னவாக இருக்கும் என்ற சிந்தனை ஓடத் துவங்கியது. ஒரு சராசரி பள்ளிச் சிறுமி , இந்த பூமியில் நடக்கும் சுகாதார சீர்கேட்டை(Health disorders), சுற்றுச்சூழல் மாசுபாட்டை சரிசெய்ய முயற்சிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
சிறுமி இணையத்தில் கிடைக்கும் தகவல் மூலம் எதிர்காலத்தில் பூமி அழிவை(Destruction of the Earth) நோக்கியப் பயணத்தை மேற்கொள்கிறது என்பதை அறிகிறாள். இதற்கு என்ன தீர்வு என்பதை அறிந்துக்கொண்டவளாக, அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார்.
சமூக நோக்குடன் எடுக்கப்பட்ட இக்குறும்படம், உண்மையிலேயே சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுவதை தடுக்கும் உணர்வைத் தூண்டுகிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையை(Ambient atmosphere ) தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதம் அருமையாக இருக்கிறது. குறும்படத்தில் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார்போல இனிமை..! படத்தை இயக்கிய(Director praveen) பிரவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..!
நீங்களும் ஒரு முறைப் பார்த்துவிடுங்களேன்..!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...