பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய படம் திரைக்கு வருகிறது
என்றால்
தியேட்டரில் திருவிழாக் கூட்டம் கூடும். அதிலும்
பிரபலமான நடிகரின் படம் என்றால் சொல்லவே தேவை இல்லை. முதல்
நாள், முதல் ஷோ பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள்
திரையரங்கின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.
பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகம் இல்லாத காலம் அது.
கிராமத்தில் ஒன்று அல்லது இரண்டு வீடுகளில் டி.வி.
இருந்தாலே ஆச்சர்யமான ஒன்று.
வார விடுமுறை நாட்களில் ஒரு படம் டி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்படும். அந்தப் படத்தை பார்க்க கிராமங்களில் குடும்பத்துடன் டி.வி. இருக்கும் வீட்டிற்கு செல்வார்கள். அந்த வீட்டை பார்த்தால் மினி சினிமா தியேட்டர் போல காட்சி அளிக்கும். காலம் கொஞ்சம் மாறத் தொடங்கியது. இந்த மாற்றத்தில் எத்தனையோ புதுமைகள் கண்களுக்கு தெரிந்தது.
டி.வி. நிறுவனங்கள் தங்களுக்கு உள்ள சந்தையை தக்க வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கின. புதிய புதிய மாடல்களில் டி.வி. கண்டறியப்பட்டன. அதில் பல நவீன வசதிகள் பொருத்தப்பட்டன. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் தங்கள் வீட்டிலும் புதிய டி.வி. வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.
டி.வி. விற்பனை அதிகரிக்க அதிகரிக்க விலையும் குறைந்து கொண்டே வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள டி.வி. விலைக்கும் தற்போதுள்ள டி.வி. விலைக்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது. விலைக் குறைப்பால் எழைகளும் டி.வி.யை நாடினார்கள். இப்போது நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் டி.வி. இடம் பிடித்து விட்டது.
மக்கள் விரும்பிய படங்களை டி.வி.யில் எளிதாக பார்த்து மகிழ வீடியோ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது. தற்போது வீடியோ போய் சி.டி., வி.சிடி. மற்றும் டி.வி.டி தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இப்படி நவீன கண்டுபிடிப்புகளின் ஆதிக்கம் தொடரும் போது மக்களின் ரசனை பழைய கருவிகளில் இருந்து புதுமையை ஏற்றுக் கொள்கிறது. தற்போது சி.டி. தொழில்நுட்பம் பழையதாக மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் இப்போது மூக்கு கண்ணாடியிலேயே ஒரு திரையரங்கத்தை உருவாக்கி விட்டார்கள் என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. வாருங்கள் மூக்கு கண்ணாடி திரையரங்கத்தைப் பற்றி சற்று விரிவாக அலசுவோம்.
இப்போது நாம் பார்க்கப் போகும் மூக்கு கண்ணாடி
தொழில்நுட்பத்திற்கு விஞ்ஞானிகள் வைத்துள்ள பெயர்
கூஷஞிகூஞ்கூ கூரக்ஹசு.. சாதாரண மூக்கு கண்ணாடியைப் போல
இதையும் எளிதாக அணிந்து கொள்ள முடியும். இதன் உள்பகுதியில்
சிறிய இரண்டு திரைகள் (எல்.சி.டி.)
பொருத்தப்பட்டிருக்கும். திரையின் அளவு சின்னதுதான். ஆனால்
உங்களது கண்களுக்கு கிட்டத்தட்ட 35 அங்குல டி.வி.யில் படம்
பார்த்தால் காட்சிகள் எப்படி தெரியுமோ? அதே அளவிற்கு இந்த
மூக்கு கண்ணாடி திரையரங்கிலும் காட்சிகள் தெரியும்.
காட்சிகள் மிகவும் துல்லியமாக தெரிய வேண்டும் என்பதற்காக
நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி துல்லியமான
லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டி.வி.க்கான மின்சாரம்
வீடியோ போன்று செயல்படும் கருவியில் இருந்து கிடைக்கிறது.
இதற்காக தனியாக பேட்டரியை இணைக்க வேண்டும் என்ற
அவசியமில்லை.
2டி மற்றும் 3டி படங்களையும் அழகாக கண்டுகளிக்க முடியும். மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் கருவிகளின் துணை கொண்டு சினிமா அல்லது நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இதற்காக பிரத்யேக இணைப்பு மூக்கு கண்ணாடிக்கு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, படத்தை மூக்கு கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் திரையின் துணை கொண்டு பார்க்கலாம்! நிகழ்ச்சிகளின் ஒலியை எவ்வாறு கேட்பது? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கும் வசதி உள்ளது. இதற்காக தனி காது கருவி ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காதில் மாட்டிக் கொண்டு படத்தைப் பார்த்தீர்கள் என்றால் திரையரங்கில் படம் பார்ப்பது போன்றதொரு பிரமிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். தொழில்நுட்பம் அதிகம் உள்ளது என்றால் விலையும் அதிகம் இருக்குமே? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.விலை கொஞ்சம் அதிகம்தான். சந்தையில் இதன் விலை கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 500 ரூபாய்.
மூக்கு கண்ணாடி திரையரங்கிற்கு போட்டியாக மற்றொரு திரைக் கண்ணாடியை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்தக் கண்ணாடியும் பல சிறப்புகளைக் கொண்டது. இதற்கு பெயர(Lumus PD 20).. இந்த வகை கண்ணாடியைக் கொண்டும் படம் பார்க்கலாம். காதில் பொருத்தப்பட்டிருக்கும் நுண் திரையின் மூலம் நீங்கள் படத்தைக் காண முடியும். இதற்கு கண்ணாடியின் வலது ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லென்ஸ் உதவி செய்கிறது. சிவப்பு, பச்சை, ஊதா நிற லேசர் கதிர்கள் ஒன்றிணைந்து நிறப்புள்ளி ஒளிக்கற்றையை கண்ணாடியில் உள்ள லென்சில் பிரதிபலிக்கிறது. இந்த லென்ஸ் ஒளிக்கற்றையை காட்சியாக மாற்றி உங்கள் விழித்திரைக்கு அனுப்புகிறது. படம் பார்க்காத நேரத்தில் இந்த கண்ணாடியை சாதாரண மூக்கு கண்ணாடியைப் போன்றும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தொழில்நுட்ப திரையரங்கு கண்ணாடிகளைப் பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது, "மக்களின் ரசனை காலத்துக்கு தகுந்த படி மாறி வருகிறது. தற்போது மூக்கு கண்ணாடி தொழில்நுட்பம் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்து வெளி உலகுக்கு வந்துள்ளது. மக்களிடம் பிரபலமாக இன்னும் சில காலம் பிடிக்கும். தற்போது செல்போன் விற்பனை எவ்வாறு சு10டி பிடித்துள்ளதோ அதே போன்று வருங்காலத்தில் மூக்கு கண்ணாடி தொழில்நுட்பமும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
பாதுகாப்பு பணியில் ரோபோ
நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு-ஹரோபோ'. எந்திர மனிதன்
என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்கள் பல்வேறு வடிவங்களில்
தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் கேளிக்கைக்காகவும்,
குழந்தைகளை மகிழ்விக்கவும் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள்
பின்னர் பல்வேறு துறைகளிலும் பயன்படும் வகையில்
உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உருவானது தான்
படத்தில் நீங்கள் பார்க்கும் ஹரோபோ கார்டு'. அதாவது
காவலாளி ரோபோ.
வீடுகள், மற்றும் வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் வாசல் பகுதியில் நின்றபடி காவல் காக்கும் பணியில் காவலர்கள் (கார்டுகள்) நிற்பதுண்டு. இப்போது இந்தப்பணியை செய்யும் வகையில் ரோபோ ஒன்றை ஜப்பான் நாடு உருவாக்கி இருக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு நிறு வனங்களில் ஒன்றான சோகா செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு இந்த காவலாளி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தொடு திரை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காவலாளி ரோபோ பெரிய ஷாப்பிங் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஷாப்பிங் நிறுவனத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றிக்கொண்டு இருந்தால் அது பற்றி காவல் துறைக்கு தகவலும் தெரிவித்து விடும்.
ஜப்பானில் உபயோகத்தில் இருக்கும் இந்த காவலாளி ரோபோ இந்தியாவுக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

வார விடுமுறை நாட்களில் ஒரு படம் டி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்படும். அந்தப் படத்தை பார்க்க கிராமங்களில் குடும்பத்துடன் டி.வி. இருக்கும் வீட்டிற்கு செல்வார்கள். அந்த வீட்டை பார்த்தால் மினி சினிமா தியேட்டர் போல காட்சி அளிக்கும். காலம் கொஞ்சம் மாறத் தொடங்கியது. இந்த மாற்றத்தில் எத்தனையோ புதுமைகள் கண்களுக்கு தெரிந்தது.
டி.வி. நிறுவனங்கள் தங்களுக்கு உள்ள சந்தையை தக்க வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கின. புதிய புதிய மாடல்களில் டி.வி. கண்டறியப்பட்டன. அதில் பல நவீன வசதிகள் பொருத்தப்பட்டன. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் தங்கள் வீட்டிலும் புதிய டி.வி. வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.
டி.வி. விற்பனை அதிகரிக்க அதிகரிக்க விலையும் குறைந்து கொண்டே வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள டி.வி. விலைக்கும் தற்போதுள்ள டி.வி. விலைக்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது. விலைக் குறைப்பால் எழைகளும் டி.வி.யை நாடினார்கள். இப்போது நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் டி.வி. இடம் பிடித்து விட்டது.
மக்கள் விரும்பிய படங்களை டி.வி.யில் எளிதாக பார்த்து மகிழ வீடியோ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது. தற்போது வீடியோ போய் சி.டி., வி.சிடி. மற்றும் டி.வி.டி தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இப்படி நவீன கண்டுபிடிப்புகளின் ஆதிக்கம் தொடரும் போது மக்களின் ரசனை பழைய கருவிகளில் இருந்து புதுமையை ஏற்றுக் கொள்கிறது. தற்போது சி.டி. தொழில்நுட்பம் பழையதாக மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் இப்போது மூக்கு கண்ணாடியிலேயே ஒரு திரையரங்கத்தை உருவாக்கி விட்டார்கள் என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. வாருங்கள் மூக்கு கண்ணாடி திரையரங்கத்தைப் பற்றி சற்று விரிவாக அலசுவோம்.

2டி மற்றும் 3டி படங்களையும் அழகாக கண்டுகளிக்க முடியும். மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் கருவிகளின் துணை கொண்டு சினிமா அல்லது நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இதற்காக பிரத்யேக இணைப்பு மூக்கு கண்ணாடிக்கு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, படத்தை மூக்கு கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் திரையின் துணை கொண்டு பார்க்கலாம்! நிகழ்ச்சிகளின் ஒலியை எவ்வாறு கேட்பது? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கும் வசதி உள்ளது. இதற்காக தனி காது கருவி ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காதில் மாட்டிக் கொண்டு படத்தைப் பார்த்தீர்கள் என்றால் திரையரங்கில் படம் பார்ப்பது போன்றதொரு பிரமிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். தொழில்நுட்பம் அதிகம் உள்ளது என்றால் விலையும் அதிகம் இருக்குமே? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.விலை கொஞ்சம் அதிகம்தான். சந்தையில் இதன் விலை கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 500 ரூபாய்.
மூக்கு கண்ணாடி திரையரங்கிற்கு போட்டியாக மற்றொரு திரைக் கண்ணாடியை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்தக் கண்ணாடியும் பல சிறப்புகளைக் கொண்டது. இதற்கு பெயர(Lumus PD 20).. இந்த வகை கண்ணாடியைக் கொண்டும் படம் பார்க்கலாம். காதில் பொருத்தப்பட்டிருக்கும் நுண் திரையின் மூலம் நீங்கள் படத்தைக் காண முடியும். இதற்கு கண்ணாடியின் வலது ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லென்ஸ் உதவி செய்கிறது. சிவப்பு, பச்சை, ஊதா நிற லேசர் கதிர்கள் ஒன்றிணைந்து நிறப்புள்ளி ஒளிக்கற்றையை கண்ணாடியில் உள்ள லென்சில் பிரதிபலிக்கிறது. இந்த லென்ஸ் ஒளிக்கற்றையை காட்சியாக மாற்றி உங்கள் விழித்திரைக்கு அனுப்புகிறது. படம் பார்க்காத நேரத்தில் இந்த கண்ணாடியை சாதாரண மூக்கு கண்ணாடியைப் போன்றும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தொழில்நுட்ப திரையரங்கு கண்ணாடிகளைப் பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது, "மக்களின் ரசனை காலத்துக்கு தகுந்த படி மாறி வருகிறது. தற்போது மூக்கு கண்ணாடி தொழில்நுட்பம் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்து வெளி உலகுக்கு வந்துள்ளது. மக்களிடம் பிரபலமாக இன்னும் சில காலம் பிடிக்கும். தற்போது செல்போன் விற்பனை எவ்வாறு சு10டி பிடித்துள்ளதோ அதே போன்று வருங்காலத்தில் மூக்கு கண்ணாடி தொழில்நுட்பமும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
பாதுகாப்பு பணியில் ரோபோ

வீடுகள், மற்றும் வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் வாசல் பகுதியில் நின்றபடி காவல் காக்கும் பணியில் காவலர்கள் (கார்டுகள்) நிற்பதுண்டு. இப்போது இந்தப்பணியை செய்யும் வகையில் ரோபோ ஒன்றை ஜப்பான் நாடு உருவாக்கி இருக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு நிறு வனங்களில் ஒன்றான சோகா செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு இந்த காவலாளி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தொடு திரை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காவலாளி ரோபோ பெரிய ஷாப்பிங் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஷாப்பிங் நிறுவனத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றிக்கொண்டு இருந்தால் அது பற்றி காவல் துறைக்கு தகவலும் தெரிவித்து விடும்.
ஜப்பானில் உபயோகத்தில் இருக்கும் இந்த காவலாளி ரோபோ இந்தியாவுக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...