Sunday, 15 July 2012

TAMIL NADU BE LATERAL COUNSELING RANK ENQUIRY AVAILABLE NOW

Lateral entry Rank Enquiry | Direct second year BE Rank Position.


Lateral entry Rank Enquiry | Direct second year BE Rank Position.



Do you want to know your Rank in the Lateral Entry Counseling of Tamil Nadu Engineering Admissions ? Then you have to visit the below given official website and enter your Register Number in the box provided, which will give you the complete details of the following information.

Name
Date of Counseling
Time of Counseling


In case if your application is not considered, you will get rejection information also.



Just enter your register number in the box and use the enter key to get the rank results.
http://www.accet.in/newrank.php

Counseling Venue (Place)

ALAGAPPA CHETTIAR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY, KARAIKUDI –630004.

PHONE : 04565 – 224535, 04565 – 230801, FAX : 04565 – 224528.
 

Anna University | Vacancy Position after counseling


Vacancy after counseling session at Anna University | Academic  Stream vacancy position in Anna University | Vacancy Position aftercounseling



Vacancy after counseling session at Anna University | Academic  Streamvacancy position in Anna University | Vacancy Position after counseling


 

As of now the Anna University is conducting counseling schedule for the students of Academic Stream and this process started on 13th July 2012 and will continue till 18th August 2012.

And candidates belonging to Academic stream will be in a fix to know what are the colleges and courses that are vacant after every session ofcounseling and for the benefit of those Academic stream students,  AnnaUniversity is updating the vacancy position in various engineering colleges after every session of counseling.

And at present the academic stream counseling vacancy is available in the following official website and students belonging to academic stream can view the vacancy position before attending the counseling session.

To view the academic stream vacancy, please visit the following link. 

http://www.annauniv.edu/vac2012/vacacagen.html

B.Arch Rank Enquiry | Anna University B.Arch Admission details | B.Arch admission under TNEA

B.Arch Rank Enquiry | Anna University B.Arch Admission details | B.Arch admission under TNEA


The B.Arch Rank rank will be published in the official website on 15.7.2012


The overall rank and Community-wise rank lists will be published in the web site of Anna University, Chennai at http://www.annauniv.edu/tnea2012. No separate announcement will be made in the Newspapers. The candidates will also be informed of their rank individually by post through the counselling call letter. The college will be provisionally allotted only through counselling.

To view your Rank Position just visit the below given link.




http://www.annauniv.edu/tnea2012

மனிதனுக்கு புரியாத சிலந்திகளின் தொழில்நுட்பம்!

ஒவ்வொரு உயிரினங்களும் தமக்கென சில விசேட இயல்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. அவற்றிலும் சிலந்திகளின் வலை பின்னும் இயல்பானது இன்றுவரைக்கும் மனிதனை வியக்க வைக்கும் தொழில் நுட்பமாகவே காணப்படுகின்றது.இது தனது உமிழ் நீரில் பின்னும் வலையின் வலிமையும் சிக்கல் தன்மையுமே இதற்கு காரணமாகும்.

எலி குடித்த பால் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கும் எலிக்கோவில்!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கர்னிமாதா என்ற இடத்தில் எலிகளின் ஆலயம் காணப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான எலிகள் காணப்படுவதுடன், இந்த எலிகள் புனிதமாக மதிக்கப்பட்டு பக்தியுடன் பராமரிக்கப்படுகின்றன.இங்கு எலிகள் குடித்த பாலினை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது. மேலும் இங்கு பக்தர்கள் தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டால், அந்த ஆலயத்திற்கு தங்கத்தில் எலி செய்து கொடுக்க வேண்டும்.

உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் மூளை வளர்ச்சி!


மூளை வளர்கிறது என்றால் அறிவும் வளர்கிறது என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால் மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் தவிர்த்த பிற பாகங்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது நரம்பியல்.
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ் எனும் மூளை பகுதியின் வளர்ச்சி அறிவு வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது. ஆனால், நாற்றம் அல்லது வாசனை நுகர்தலுக்கு காரணமான ஆல்பாக்டரி பல்பு மற்றும் உறக்கம், உடல் வெப்பம், பசி, தாகம் போன்ற உடலியல் பண்புகளுக்கு காரணமான ஹைப்போதலாமஸ் போன்ற பகுதிகளுக்கும் அறிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையாம்.
நியூரோஜெனிசிஸ் என்று அழைக்கப்படும் (மூளையிலுள்ள) நரம்புகளின் வளர்ச்சியே மூளை வளர்ச்சி எனப்படுகிறது. குழந்தைப் பருவம் முடிந்து, பருவம் எய்தி முதிர்ச்சி அடைந்த பின்னர் மூளை வளர்ச்சி நின்றுவிடும் என்ற ஒரு நம்பிக்கை பல வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் குழந்தை பருவம் முடிந்த பின்னரும் மனிதர்களின் மூளையானது புதிய நரம்புகளை உற்பத்தி செய்து தொடர்ந்து வளர்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
உதாரணமாக, மூளையின் ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆல்பாக்டரி பல்பு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் புதிய நரம்புகள் தோன்றுவதைக் கூறலாம். இந்த வரிசையில், ஹைப்போதலாமஸ் பகுதியிலும் புதிய நரம்புகள் தோன்றுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நரம்புகளுக்கு டானிசைட்ஸ் என்று பெயர்.
ஆனால் இந்த பகுதியில் புதிய நரம்புகள் தோன்றுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை!
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ், நுகர்தலுக்கும் காரணமான ஆல்பாக்டரி பல்பு பகுதிகளில் புதிய நரம்புகள் வளர வேண்டியது அவசியம். ஏனென்றால், ஹிப்போகாம்பஸ் பகுதியானது தினம் தினம் புதிய புதிய நினைவுகளை உருவாக்கி சேமிக்க வேண்டும். அதுபோலவே ஆல்பாக்டரி பல்பு பகுதி யானது புதிய புதிய வாசனை அல்லது நாற்றங்களை நுகர வேண்டும். இதற்கு புதிய நரம்புகள் அவசிய மாகிறது.
ஆனால், `மாற்றங்கள் இல்லாத தினசரி உடலியல் நிகழ்வுகளான உறக்கம், உடல் வெப்பம், பசி மற்றும் தாகத்துக்கு காரணமான ஹைப்போதலாமஸ் பகுதியில் புதிய நரம்புகள் வளர்வதற்கான காரணம் என்ன?’ என்பது இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
இந்த புதிருக்கான விடையைத் தேடிய அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் சேத் பிளாசாவுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியிலுள்ள மீடியன் எமினென்ஸ் என்னும் பகுதியில் தோன்றும் புதிய `டானிசைட்’ நரம்புகளே உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன எனும் அறிவியல் உண்மைதான் அது!
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகள் வயது முதிர்ச்சி அடைந்த பிறகு உடல் பருமன் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இதற்கு, ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் நரம்பு வளர்ச்சி அல்லது நியூரோஜெனிசிஸ் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர் பிளாசா எண்ணினார்.
இந்த கூற்றிலிருக்கும் உண்மையை கண்டறிய, எலிகளுக்கு பிறந்தது முதல் தொடர்ந்து அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கால இடைவெளிகளில் ஹைப்போதலாமஸ் பகுதியில் நரம்பு வளர்ச்சி நிகழ்கிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், கொழுப்புச் சத்து கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படாத இள வயது எலிகளின் நரம்பு வளர்ச்சியில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் ஆச்சரியப்படும்படியாக, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட வயதான எலிகளின் ஹைப்போதலாமஸ் பகுதியில் மட்டும் டானிசைட் நரம்பு வளர்ச்சியானது `நான்கு மடங்கு’ அதிகரித்தது கண்டறியப்பட்டது. மேலும் இந்த எலிகள் அதிக எடையையும், அதிக கொழுப்பு படிவையும் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் காரணம் என்ன என்பதை திட்டவட்டமாக நிரூபிக்க, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மீடியன் எமினென்ஸ் பகுதியிலுள்ள டானிசைட் நரம்புகள் எக்ஸ்ரே கதிர்கள் மூலம் கொல்லப்பட்டன. இதன் காரணமாக, அந்த எலிகளின் உடல் எடையும், கொழுப்புப் படிவும் வெகுவாக குறைந்து போனது.
இதன் மூலம், உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் அதிகப்படியான டானிசைட் நரம்பு வளர்ச்சியே காரணம் என்பது நிரூபணமானது என் கிறார் ஆய்வாளர் பிளாசா.

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

தாய்ப்பாலில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து?

எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோய் மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எச்.ஐ.வி என்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். தொடக்கத்தில் உடல் ரீதியிலான தொடர்புகளான உடல் உறவு போன்றவற்றால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும் என்று நம்பப்பட்டு, பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளால் எய்ட்ஸ் பரவுகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
தகாத உறவுகளில் ஈடுபடுவோருக்கு பிறப்பது தவிர வேறு ஒரு பாவமும் அறியாத அவர்களின் சந்ததிகளும் எய்ட்ஸ் நோய்க்கு பலியாவது மிக மிக கொடுமையானது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்பின்போது எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்படாமல் இருந்தாலும், சுமார் 15 சதவீத குழந்தைகள் ஆரம்பகால குழந்தைப்பருவத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.
அது எப்படி?
எச்.ஐ.வி. வைரஸ் தாய்ப்பாலுக்குள் பரவும் தன்மையுள்ளது. இதனால் எச்.ஐ.வி. வைரஸால் தாக்கப்பட்ட தாய்மார்களுடைய தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புக்கு பின்னர் எய்ட்ஸ் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
`ஆனால், தாய்ப்பாலில் இருக்கும் ஏதோ ஒரு வேதியியல் பொருளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் வைரஸால் தாக்கப்பட்ட உயிரணுக்களை கொல்லும் திறன் இருக்கிறது. மேலும், மனித நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களை உடைய எலியின் மீதான பரிசோதனையில், எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் திறனும் தாய்ப்பாலுக்கு இருக்கிறது’ என்னும் ஆச்சரியமான முடிவுகளை முன்வைக்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஏஞ்சலா வால் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, எய்ட்ஸ் நோய்க்கான ஒரு நல்ல தீர்வு விரைவில் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தாய்ப்பாலின் மருத்துவக் குணம் தொடர்பான முந்தைய ஆய்வுகளில், தாய்ப்பாலுக்கு வைரஸ்களை கொல்லும் திறன் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த வைரஸான எச்.ஐ.வி.யை கொல்லும் திறனும், எச்.ஐ.வி. பரவுதலை தடுக்கும் ஆற்றலும் தாய்ப்பாலுக்கு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை தெரியாமல் இருந்தது.
இதனைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளரான ஏஞ்சலா வால், மனித எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் தைமஸ் திசுக்களை உடைய ஒரு எலியை உருவாக்கினார். அந்த எலிகளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் வாய்வழியாக செலுத்தப்பட்டபோது அவற்றுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஆனால் அதே எலிகளுக்கு எச்.ஐ.வி கலந்த தாய்ப் பால் கொடுக்கப்பட்டபோது எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை.
இதன் மூலம், எச்.ஐ.வி கிருமிகளை கொல்லும் திறன் தாய்ப்பாலுக்கு இயற்கையிலேயே உண்டு என்பது நிரூபணமாகிறது என்கிறார் இந்த ஆய்வினை மேற்பார்வையிட்ட மூத்த ஆய்வாளர் விக்டர் கார்சியா.
தற்போது தாய்ப்பாலில் உள்ள எச்.ஐ.வி. கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட அந்த விசேஷமான வேதியியல் மூலக்கூறினை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளதாம். அந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்படும் வேளையில், உடல் உறவு மூலம் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றினைக் கூட தாய்ப்பாலில் இருக்கும் அந்த விசேஷ மூலக்கூறினை வைத்து தடுத்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தாய்ப்பாலுக்கு எச்.ஐ.வி. தொற்றினை தடுக்கும் ஆற்றல் இருக்குமானால் தாய்ப்பால் கொடுக்கப்படும் சில குழந்தைகளுக்கு ஏன் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது?
பிளவுபட்ட முலைக் காம்புகளில் இருந்து குழந்தைகள் பாலை உறிஞ்சும்போது தாயினுடைய ரத்தத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்கள் குழந்தைகளின் உடலுக்குள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற மறைமுகமான சில காரணங் களாலும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருத்துவப்போர் முழுவீச்சுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை நாம் மட்டுமல்லாது, நம்மைச் சார்ந்த சமூகத்தினருக்கும் புரிய வைத்து பாதுகாக்க வேண்டும்.

தாய்ப்பாலில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து?

எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோய் மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எச்.ஐ.வி என்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். தொடக்கத்தில் உடல் ரீதியிலான தொடர்புகளான உடல் உறவு போன்றவற்றால் மட்டுமே எய்ட்ஸ் நோய் பரவும் என்று நம்பப்பட்டு, பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளால் எய்ட்ஸ் பரவுகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
தகாத உறவுகளில் ஈடுபடுவோருக்கு பிறப்பது தவிர வேறு ஒரு பாவமும் அறியாத அவர்களின் சந்ததிகளும் எய்ட்ஸ் நோய்க்கு பலியாவது மிக மிக கொடுமையானது. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்பின்போது எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்படாமல் இருந்தாலும், சுமார் 15 சதவீத குழந்தைகள் ஆரம்பகால குழந்தைப்பருவத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.
அது எப்படி?
எச்.ஐ.வி. வைரஸ் தாய்ப்பாலுக்குள் பரவும் தன்மையுள்ளது. இதனால் எச்.ஐ.வி. வைரஸால் தாக்கப்பட்ட தாய்மார்களுடைய தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புக்கு பின்னர் எய்ட்ஸ் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
`ஆனால், தாய்ப்பாலில் இருக்கும் ஏதோ ஒரு வேதியியல் பொருளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் வைரஸால் தாக்கப்பட்ட உயிரணுக்களை கொல்லும் திறன் இருக்கிறது. மேலும், மனித நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களை உடைய எலியின் மீதான பரிசோதனையில், எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் திறனும் தாய்ப்பாலுக்கு இருக்கிறது’ என்னும் ஆச்சரியமான முடிவுகளை முன்வைக்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஏஞ்சலா வால் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, எய்ட்ஸ் நோய்க்கான ஒரு நல்ல தீர்வு விரைவில் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தாய்ப்பாலின் மருத்துவக் குணம் தொடர்பான முந்தைய ஆய்வுகளில், தாய்ப்பாலுக்கு வைரஸ்களை கொல்லும் திறன் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த வைரஸான எச்.ஐ.வி.யை கொல்லும் திறனும், எச்.ஐ.வி. பரவுதலை தடுக்கும் ஆற்றலும் தாய்ப்பாலுக்கு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை தெரியாமல் இருந்தது.
இதனைக் கண்டறிய, அமெரிக்க ஆய்வாளரான ஏஞ்சலா வால், மனித எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் தைமஸ் திசுக்களை உடைய ஒரு எலியை உருவாக்கினார். அந்த எலிகளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் வாய்வழியாக செலுத்தப்பட்டபோது அவற்றுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஆனால் அதே எலிகளுக்கு எச்.ஐ.வி கலந்த தாய்ப் பால் கொடுக்கப்பட்டபோது எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை.
இதன் மூலம், எச்.ஐ.வி கிருமிகளை கொல்லும் திறன் தாய்ப்பாலுக்கு இயற்கையிலேயே உண்டு என்பது நிரூபணமாகிறது என்கிறார் இந்த ஆய்வினை மேற்பார்வையிட்ட மூத்த ஆய்வாளர் விக்டர் கார்சியா.
தற்போது தாய்ப்பாலில் உள்ள எச்.ஐ.வி. கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்ட அந்த விசேஷமான வேதியியல் மூலக்கூறினை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளதாம். அந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்படும் வேளையில், உடல் உறவு மூலம் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றினைக் கூட தாய்ப்பாலில் இருக்கும் அந்த விசேஷ மூலக்கூறினை வைத்து தடுத்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தாய்ப்பாலுக்கு எச்.ஐ.வி. தொற்றினை தடுக்கும் ஆற்றல் இருக்குமானால் தாய்ப்பால் கொடுக்கப்படும் சில குழந்தைகளுக்கு ஏன் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது?
பிளவுபட்ட முலைக் காம்புகளில் இருந்து குழந்தைகள் பாலை உறிஞ்சும்போது தாயினுடைய ரத்தத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்கள் குழந்தைகளின் உடலுக்குள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுபோன்ற மறைமுகமான சில காரணங் களாலும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருத்துவப்போர் முழுவீச்சுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை நாம் மட்டுமல்லாது, நம்மைச் சார்ந்த சமூகத்தினருக்கும் புரிய வைத்து பாதுகாக்க வேண்டும்.

சூயிங்கம்’ மென்றால் ஞாபக மறதி!

சிலருக்கு எந்நேரமும் `சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபகசக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களைவிட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும், எண்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறார்கள்.
சூயிங்கம்மை மெல்லும்போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனைப் பாதித்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சூயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம்.
சூயிங்கம், குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சூயிங்கம் ஒருவரின் திறனைக் கூட்டும், மூளைத் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.
ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப் பல்கலைக்கழகத்தின் மிச்சைல் கோஸ்லோவ், “மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புக்கு சூயிங்கம் உதவுகிறது என்று முன்பு சில ஆய்வுகள் வாதிட்டன.
ஆனால், வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சூயிங்கம் போன்ற பகுதிச் செயல்பாடுகள் குறுக்கிட்டுப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்” என்று உறுதிபடக் கூறுகிறார்.

Sunday, 8 July 2012

நான் ரசித்த குறும்படம் "பச்சை நிறமே"

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் பள்ளிச்சிறுமியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குறும்படம் இது.

வணக்கம் நண்பர்களே..!

சமூக சிந்தனை, சமூக சேவை(Social Services), இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொண்டு நிறுவனங்கள்(NGOs) பல இருக்கின்றன. சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இவர்களெல்லாம் வேலைவெட்டி இல்லாதவர்களா? இவர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருக்கிறீர்களா?

என்றாவது ஒருநாள் இவர்களைப் பற்றிய சிந்தனை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

பொதுச்சேவை என்பது என்ன? நமது சுற்றுப்புறச்சூழலை காப்பதும் ஒரு பொது சேவைதான். உங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுதலைத்(Environmental Pollution) தடுக்க என்றேனும் எண்ணியதுண்டா?

சமூக விரோதிகளிடமிருந்து(social enemies) பொதுச் சொத்துகளை பாதுகாத்திருக்கிறீர்களா?

இவையெல்லாம் செய்திருந்தால் நீங்கள் ஒரு சமூக சேவகர்தான். மேற்குறிப்பிட்ட சமூகச் சிந்தனையுடன், சமூகத் தொண்டாற்றும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை தடுக்கும் முகமாக குறும்படத்தை காண நேர்ந்தது.

நான் பெரிதும் ரசித்துப் பார்த்த குறும்படம் இது..

படத்தில் ஒரு சிறுமிதான் கதாபாத்திரம். சிறுமியின் பெயர் பச்சையம்மாள். குறும்படத்தின் பெயர் "பச்சை நிறமே".

தலைப்பை பார்த்தவுடனேயே இது என்னவாக இருக்கும் என்ற சிந்தனை ஓடத் துவங்கியது. ஒரு சராசரி பள்ளிச் சிறுமி , இந்த பூமியில் நடக்கும் சுகாதார சீர்கேட்டை(Health disorders), சுற்றுச்சூழல் மாசுபாட்டை சரிசெய்ய முயற்சிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

சிறுமி இணையத்தில் கிடைக்கும் தகவல் மூலம் எதிர்காலத்தில் பூமி அழிவை(Destruction of the Earth) நோக்கியப் பயணத்தை மேற்கொள்கிறது என்பதை அறிகிறாள். இதற்கு என்ன தீர்வு என்பதை அறிந்துக்கொண்டவளாக, அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார்.

சமூக நோக்குடன் எடுக்கப்பட்ட இக்குறும்படம், உண்மையிலேயே சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுவதை தடுக்கும் உணர்வைத் தூண்டுகிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலையை(Ambient atmosphere ) தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதம் அருமையாக இருக்கிறது. குறும்படத்தில் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றார்போல இனிமை..! படத்தை இயக்கிய(Director praveen) பிரவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..!

நீங்களும் ஒரு முறைப் பார்த்துவிடுங்களேன்..!

 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

டைனோசர்கள் அழிவுக்கு காரணமென்ன? புதிய ஆராய்ச்சி முடிவுகள்- வீடியோ படங்களுடன்..!!!

டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த பிரமாண்டமான விலங்கினம். கால நிலை மாற்றங்களால் இந்த டைனோசர்கள் இறப்புக்கு வேறு ஒரு காரணம் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

பலவகை டைனோசர்களில் சாரோபோட் என்னும் தாவரம் உண்ணும் டைனோசர் வகை மிகவும் பிரபலம். டைனோசர்களின் உடலமைப்பு,  வேட்டையாடுதல், உணவு வகை பற்றி ஜூராசிக் பார்க் படத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.




அந்த படத்தில் தாவரம் உண்ணும் டைனோசர்களின் கழுத்து ஒட்டகச்சிவிங்கி போல மேல்நோக்கி இருப்பதாக காட்டப்படும். ஆனால் சமீபத்திய ஆய்வில், டைனோசர்கள் கழுத்து கிடைமட்டமாகவோ அல்லது தொங்கப் போட்டுக் கொண்டோ உயிர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.



dinosaur photos


இதன் நீண்ட கழுத்து பகுதிதான் உணவை, பறித்து தின்ன ஏதுவாக இருப்பதை அறிவோம். இதனுடைய கழுத்து 33 அடி முதல் 46 அடி வரை இருந்திருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் இந்த உயரத்துக்கு எழும்பி சென்றுவர மற்ற விலங்கினங்களைவிட 7 மடங்கு நேரம் ஆகும் என்று தெரிய வருகிறது. இந்த அதிக இடைவெளியே ரத்த அழுத்தம் குறைந்து, அதன் அழிவுக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்து கூறுகிறார்கள்.

அரியலூர் அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் முட்டைகள். இங்கு 40 முட்டைகள் வரை கண்டெடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மண்ணுக்குள் புதைந்து, கிட்டதட்ட கல்லாக மாறிய டைனோசரின் முட்டைகளைத் தான் கீழே காண்கிறோம். 
dinosaur photo
டைனோசர்-முட்டைகள்(புதைபடிமங்கள்)

ஆய்வு குறித்து விஞ்ஞானி சேய்மோர் கூறும்போது, "பொதுவாகவே எந்த உயிரினமும் தலையை உயர்த்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். டைனோசர்களும் உணவுக்காக தலையை உயர்த்தும்போது ரத்தம் அழுத்தம் மிக உயர்வாக இருந்திருக்கும். இதனால் அதிகமான சக்தியும் விரயம் செய்யப்பட்டது.

உணவு தேடும் நேரத்தில் அவைகள் 70 முதல் 90 டிகிரி வரை தலையை உயர்த்தும். பின்னர் சாதாரண நிலையில் 30 டிகிரி அளவுக்கு கிடைமட்டமாக கொண்டு வரும். இதனால் ரத்த ஓட்டத்தில் சீரற்ற நிலையும், அதிக சக்தி விரயம் ஏற்பட்டு அவற்றின் அழிவு ஏற்பட்டிருப்பதாக கணித்து உள்ளோம்.

dinosaur photos
டைனோசர் புதை படிமங்கள்



 
85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ள இவை 100 டன் எடை கொண்டது.. 110 அடி நீளம் உடையது இதன் உயரம் நீண்ட கழுத்து பகுதியையும் சேர்த்து 54 அடி வரை இருப்பது வியப்புக்குரியது.

இனிமேல் குழந்தைகள் டைசோனரை வரையும்போது தலைதாழ்த்தி (கிடைமட்டமாக) வரைந்து பழக வேண்டும். இதுதான் உண்மையான இயற்கையான டைனோசரைக் குறிப்பதாக இருக்கும்.

TNPSC குரூப் IV (07-07-2012) கேள்விகளுக்கான விடைகள்

வணக்கம் நண்பர்களே.. !

நேற்று 07-07-2012 நடைப்பெற்ற TNPSC Group IV 2012 (07-07-2012) தேர்வுமுடிவுகளை வெளியிட்டது.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்..

தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்..

PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள்..


1. GENERAL KNOWLEDGE

2. GENERAL TAMIL

3. GENERAL ENGLISH

மூன்று பகுதிகளுக்கான வினாவிடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்..

வெற்றிப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.. சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் நேற்றிலிருந்து தவறான தகவல்களை அளித்து வருகிறது.. அரசு இணையதளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது..

தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் உடனடியாக இத்தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.. நன்றி நண்பர்களே...!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில்!


மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?, புற்றுநோயின் ஆபத்துக்கள் என்ன? இன்னமும் உடற்கல்வி, சுகாதாராம் சம்பந்தமான பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு 3டி உருவமைப்புமூலம் இலகுவாகவும், தெளிவாகவும் பதில் தருகிறது Biodigitalsystems எனும் யூடியூப் சேனல்.
மாரடைப்பு என்றால் என்ன?

புற்றுநோய் என்றால் என்ன?


உடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றுக்கொள்வதற்கு இவை உங்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.

கிரீன்லாந்தில் ராட்சத விண்கல் பள்ளம் கண்டுபிடிப்பு!



விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம் கிரீன்லாந்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.100 கி.மீ விட்டம் கொண்ட இப்பள்ளம் 300 கோடி ஆண்டு பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில் உலகின் மிக பழமையான, மிகப்பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டென்மார்க் புவியியல் ஆய்வு துறை மற்றும் கிரீன்லாந்து ஆராய்ச்சியாளர் ஆடம் க்ரேட் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் அரிய கண்டுபிடிப்பு இது.கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் என்ற இடத்தில் இந்த மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளம் உருவாக காரணமான விண்கல்லின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதில் இதுகுறித்த அரிய தகவல்கள் வெளியாகி உள்ளது.


இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது உலகில் இதுவே முதன்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மெகா சைஸ் விண்கல் பள்ளம் குறித்து க்ரேட் மேலும் கூறியதாவது, விண்ணில் இருந்து பல்வேறு அளவுகளில் தொடர்ந்து கற்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. இதில் பெரும்பாலான கற்கள் பூமியின் வளிமண்டலத்தை கடக்கும் நேரத்தில் எரிந்து, நடுவானிலேயே சாம்பலாகி விடுகின்றன.கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் பகுதியில் பிரமாண்ட விண்கல் ஒன்று சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருப்பதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தின் விட்டம் 100 கி.மீ. நீளம் உள்ளது. இதன் பரப்பு சுமார் 7,857 சதுர கி.மீ. (தோராயமாக சென்னை பெருநகரம் போல 18 மடங்கு அதிகம்.)விழுந்த போது, இது சுமார் 500 கி.மீ. கொண்ட பள்ளமாக இருந்திருக்கிறது. மழை, காற்று, மண்அரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், 300 கோடி ஆண்டுகளில் இப்பள்ளம் சற்று சுருங்கியுள்ளது.


ஆண்டுகள் ஓடியதில், இப்பள்ளமும் புதைந்து போயிருக்கிறது. இது தற்போது பூமியின் தரைப்பகுதியில் இருந்து 25 கி.மீ ஆழத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறை.ராட்சத விண்கல் விழுந்ததால் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை, இவ்வளவு பெரிய கல் ஒன்று இப்போது விழுந்தால், அது ஏற்படுத்தும் பாதிப்புகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும். விண்கல் பள்ளம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

கடவுள் துகளுக்கு இசைவான இணை துகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் அறிவிப்பு!


சேர்ன் கருத்தரங்கில்.

இயற்பியல் துறையின் மிக முக்கிய மைல் கல்லாக அடையாளங்காணப்பட்டுள்ள கடவுள் துகள் பற்றிய தமது ஆய்வு ஆராய்ச்சி தகவல்களை சுவிற்சர்லாந்தின் சேர்ன் நகரில் உள்ள கருத்தரங்கில் வைத்து இன்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.தம்மால் கண்டுபிடிக்கப்பட்டது, கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, குறித்த நுண்துகளுக்கு 125.3 ஜிகா எலெக்ட்ரோன் வோல்ட்ஸ் (GeV) நிறை இருப்பதாகவும், புரோட்டோனை விட 113 மடங்கு அதிக நிறை கொண்ட இப்பொருள் ஒவ்வொரு அணுவிலும் இதயமாக தொழிற்படுவதாகவும் அறிவித்துள்ளனர். 


குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியந்தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோதல் வெடிப்பு!

இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவது தேவைதானா?
  'ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில், இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்படுவது ஏன்? என குறித்த கருத்தரங்கின் போது ஜப்பான் மற்றும் சில வெளிநாட்டு நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானிகள், இந்த ஆராய்ச்சிக்குழுவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விஞ்ஞானிகள் தங்களது சுயநலன் பாராது உழைத்திருக்கின்றனர். அபிவிருத்தி அடைந்து வரும் ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.


அடிப்படை அறிவியல் (Fundemental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Appoled Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது. நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர்.  


கடவுள் துகள் இருப்பதை உறுதிப்படுத்த பல வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட சுவிற்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள சேர்ன் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றி அமைக்கப்பட்ட நிலக்கீழ் குழாய்கள் 17 மைல் தூரத்திற்கு செல்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் அணுத் துகள் “ஹிக்ஸ் போஸான்” கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது!



கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும்(universe) உருவாயின என்பது கோட்பாடு.


இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் சக்தியோடு அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.இந்த கோட்பாட்டின்படி(தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. அவை இருப்பதையும் பார்த்து விட்டோம்.

ஆனால் இதுவரை கண்ணுக்குப் புலப்படாத அணுத் துகள் தான் ஹிக்ஸ் போஸான்.இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்- சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின. அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது.


இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)


பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும்(அதன் எடையை) தேடினர்.

ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஹிக்ஸ் போஸான்: பெட் கட்டி தோற்றுப் போன பிரபல விஞ்ஞானி!



கடவுளின் அணுத் துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் குறித்து முதல் முறையாக தெரிவித்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ், தான் சொன்னதை சாதித்துக் காட்டியுள்ளார்.இதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். அதேசமயம் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டு 100 டொலர் பெட் கட்டியிருந்தேன். தற்போது பெட்டில் நான் தோற்று விட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்.உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். பேச முடியாமல், முற்றிலும் முடங்கிய நிலையில் சக்கர நாற்காலியில் தான் பல வருடங்களாக இவர் காலத்தை தள்ளி வருகிறார்.

ஆனால் தற்போது 70 வயதாகும் இவரது திறமைகள் அபாரமானவை. தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம் என்ற இவரது நூல் மிகப் பிரபலமானது. பிளாக் ஹோல் குறித்து அதில் அவர் அவ்வளவு அழகாக, எளிமையாக விளக்கியிருப்பார்.தற்போது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு குறித்து ஹாக்கிங் கருத்து தெரிவித்துள்ளார். ஹிக்ஸ் போஸான் குறித்து முதன் முதலில் தெரிவித்தவரான பீட்டர் ஹிக்ஸை இவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து ஹாக்கிங் வெளியிட்டுள்ள கருத்தில், பீட்டர் ஹிக்ஸ் நோபல் பரிசுக்கு முழுமையாக தகுதியானவர். இவரது கடவுளின் அணுத்துகள் கண்டுபிடிப்பு மிகப் பெரிய விஷயம்.மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்டன் கார்னேவிடம், பீட்டர் ஹிக்ஸால், ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க முடியாது என்று நான் சவால் விட்டிருந்தேன். 100 டொலர் பெட்டும் கட்டியிருந்தேன். ஆனால் அது தவறு என்பதை ஹிக்ஸ் நிரூபித்து விட்டார். இப்போது எனக்கு 100 டொலர் நஷ்டமாகி விட்டது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.


கண்ணுக்குத் தெரியாத ஒரு அணுத்துகள்தான் இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கிறது என்பதை முதல் முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ்தான். அந்தத் துகள்தான் ஹிக்ஸ் போஸான் எனப்படும் கடவுளின் அணுத்துகள்.இவர் இதை முதலில் சொன்னபோது இது வெறும் கட்டுக்கதை, இல்லாததைச் சொல்கிறார் என்று விஞ்ஞானிகள் பலரும் கேலி செய்தனர். இதுகுறித்து அவர் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஒரு அறிவியல் சஞ்சிகை நிராகரிக்கக் கூட செய்தது. இயற்பியலின் அடிப்படையைத் தகர்க்க முயல்கிறார் பீட்டர் ஹிக்ஸ் என்று பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டக் கூட செய்தனர்.


அப்போது 34 வயதான பீட்டர் ஹிக்ஸ், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருந்தார். தனது வாதத்தை அவர் கைவிடவில்லை. அவரது கூற்று சரியே என்று தொடர்ந்து கூறி வந்தார்.இருப்பினும் அவரால் அதை நிரூபிக்க முடியாமலேயே இருந்தது. தற்போதுதான் ஹிக்ஸ் போஸான் இருப்பது உண்மை என்று தெரிய வந்து பீட்டர் ஹிக்ஸ் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.கடந்த 48 வருடங்களாக வெறும் கற்பனைக் கதாபாத்திரமாகவே இருந்து வந்த கடவுளின் அணுத்துகள் உண்மைதான் என்பதை ஜெனீவா அருகே ஐரோப்பிய நாடுகள் இணைந்து அமைத்த அணு ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

கடவுள் துகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட சேர்ன் ஆய்வு கூடம் : புகைப்படங்கள்!

உலகெங்கும் கடவுள் துகள் (God Particle) ஆராய்ச்சியின் புதிய வெற்றியை பற்றி பேசிக்கொண்டிருக்க,இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட சுவிற்சர்லாந்தின் சேர்ன் ஆராய்ச்சி கூடத்தை சுற்றி கட்டப்பட்ட பாரிய ஹாட்ரன் மோது கருவியை பற்றிய சில சுவாரஷ்யமான புகைப்படங்கள் சில.இவை 2009ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் மீள்திருத்தப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளன. மின் ஒழுக்கினால், இதன் 9,000 காந்த ஈர்ப்பு கொண்ட சூப்பர் கடத்திகளில் 53 பாகங்கள் சேதமடைந்திருந்தன. அதன் திருத்த பணிகளும், மீள் தொடக்கமும் இங்கு பதியவிடப்பட்டுள்ளது.












இணையத்தை தாக்க வரும் வைரஸ்: தப்பிக்குமா உங்கள் கணணி?

இணையத்தில் உலவும் டி.என்.எஸ் சேஞ்சர் என்ற வைரஸ் இணையத்தை முடக்கி கணணியை செயலிழக்கச் செய்து விடும் என்ற தகவல் இணையதள உபயோகிப்பாளர்களிடம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9ம் திகதி செயலிழந்து விடும் என்கின்றனர் கணிப்பொறி வல்லுனர்கள்.


டி.என்.எஸ்(டொமைன் நேம் சிஸ்டம்) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணணிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது.தற்போது டி.என்.எஸ் சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயலிழக்கச் செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர்.இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கணணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு (எப்.பி.ஐ) மாற்று சர்வரை நிறுவியது.


இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9ம் திகதி செயல்பட தொடங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கணணிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியுங்கள்: எனவே டி.என்.எஸ் சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய நீங்கள் www.dns-ok.us இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும். வைரஸ் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.


பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9ம் திகதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இணையதள உபயோகிப்பாளர்கள்.வைரசை முற்றிலுமாக அழிக்க: ஒருவேளை உங்கள் கணணி பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணணியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது.விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணணியிலிருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான “அவிரா” ஒரு புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.டவுன்லோட் ஆகியதும் “exe” பைலை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணணி பாதுகாப்பாக உள்ளது.


எனவே இந்த மென்பொருள் உங்கள் கணணியில் இன்ஸ்டால் ஆகாது. ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணணியிலிருந்து அழித்து விடும்.மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணணிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.
DNS Resolution = GREEN

Your computer appears to be looking up IP addresses correctly!

Thursday, 5 July 2012

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது.


நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன.  வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன.  எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம்.  எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது.  எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறுகிறார். 'பார்த்தா, எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது! ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்'

கீதை உபதேசம்
எனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும்.


நாம் நம்முடைய ஆற்றலை, அறிவை கவனத்தைச் சிதறவிடாது ஒரே செயலில் செலுத்தினால் மட்டுமே அதில் வெற்றபெற முடியும்.

நியூட்டன் என்னும் சிறுவன் ஒரு நாள் காலையில் தனது தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவன் ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். திடீரென அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பில் அவன் மீது விழுந்தது.

நாமாக இருந்தால் என்ன செய்வோம். ஆகா! இந்தப் பழம் இனிக்கும் என்று உடனே அதை சாப்பிட்டுவிட்டு, ஆப்பிளை பற்றியே மறந்துவிடுவோம்.

ஆனால் அந்தச்சிறுவனோ, 'இந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்? மேலே ஏன் செல்லக்கூடாது? என்று விநோதமாகச் சிந்தித்தான்.

தனது மனம், எண்ணம், செயல் மூன்றையும 'ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது' என்று பல காலம் மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தான். இயற்கையும் அந்த சிறுவனின் விடாமுயற்சிக்குப் பணிந்து தனது இரகசியத்தை அவனுக்கு விளங்க வைத்து.  அதனால்தான் "பூமிக்கு கீழே இழுக்கும் ஆற்றல் (Gravitaion) உண்டு. என்ற தனது புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு கொடுத்தார். அந்தச் சிறுவன்தான் சர். ஐசக் நியூட்டன். அவரது கண்டுபிடிப்புதான் மற்ற கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

சாமுவேல் ஜான்சன்
எனவே நாம் நம்மைச் சுற்றி தினமும் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும், கூர்மையாக மனம் ஒருமைப்படுத்தி (Concentration ) பார்த்தோமேயானால், நமது வெற்றிக்கான அடித்தளம், தானாகவே நமக்குத் தெரியும்.

ஒரு ஊசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு முனை கூர்மையாக இருப்பதால்தான் மட்டுமே அதனால் துணிக்குள் நுழைந்து தைக்க முடிகிறது. ஆனால் அதே ஊசியின் பின்புறம் கொண்டு நீங்கள் எதுவுமே செய்ய முடியாததற்கு காரணம்? நமக்குத் தெரிந்ததுதான்.. முனை கூர்மையில்லாததுதான்.

எனவே நமது எண்ணங்களைக் குவித்து, அதை ஊசிமுனை மாதிரி கூர்மையாக வைத்துக்கொண்டால் தான் நமது இலட்சியங்கள் எல்லாம் நிறைவேறும். அதை விட்டு விட்டு இலட்சியம், இலட்சியம் என்று கூறிக்கொண்டே வெறுமனே செயலாற்றுவதில் பயன் ஒன்றும் ஆகப் போவதில்லை.

மனிதன் சந்தர்ப்பங்களின் படைப்பு அல்ல. வெற்றி பெறும் மனிதன், சந்தர்ப்பங்களைத் (வாய்ப்புகளை) தானே படைத்துக்கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.

ஊசி நூல்
ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் என்ற மேதை மிகமிக வறுமையில் வாடியவர்தாம். அவரால் எப்படி உலகத்தின் புகழ்பெற்ற முதல் ஆங்கில அகராதியை எழுத முடிந்தது. அவரது தணியாத இலக்கியக் காதல் தான் அதற்குக் காரணம். தான் கொண்ட இலட்சியத்தின் மீது கொண்ட பிடிவாத்த்தால்தான்.  பலவருட காலம் உழைத்து உலகத்தாருக்கு ஒரு அகராதியை வழங்க முடிந்தது.!!!

சாமுவேல்ஸ் டிக்னரி

ஒரிஜினல் சாமுவேல் டிக்னரியின் முதல் பக்கம்.

நன்றி நண்பர்களே.. வேறொரு தன்னம்பிக்கை, தன்னம்பிக்கையாளர் பதிவின் மூலம் சந்திப்போம்..பதிவைப்பற்றிய தங்களுடைய கருத்துகளையும் எண்ணங்களையும் எழுதலாம். பதிவை தங்கள் நண்பர்கள் மற்றும் திரட்டிகளில் பகிருவதன் மூலம் பலரையும் சென்றடைய உதவுங்கள்.

100% படித்தது மனதில் பதிய எளிய வழி..!!


படிப்பதும், பதிவதும்

இராத்திரி 12 மணி வரைக்கும் படிக்கிறா. காலையிலே 5 மணிக்கு எழுந்து படிக்கிறா. தினத்துக்கும் எட்டு மணிநேரம் படிக்கிறா. ஆனா மார்க் மட்டும் 50க்கு மேல் வாங்கறதில்லை. இவ இப்படியிருந்தா எப்படிங்க டாக்டராக முடியும். நீங்கதான் வழி செல்லணும் ”

இது ஒரு பெற்றோரின் ஆதங்கம்.

என் friend எப்ப பார்த்தாலும் T.V. பாத்திட்டு, விளையாடிட்டு, அரட்டை அடிச்சிட்டு ஜாலியாக இருக்கா. தினம் இரண்டு மணி நேரம் கூட படிக்கிறதில்லை. எல்லா exam மிலும் 90,100 ன்னு வாங்கறா. நான் அவளைக் காட்டிலும் 6 மணி நேரம் அதிகம் படிக்கிறேன். ஆனா 60 மார்க்குக்கு மேலே வாங்க முடியறதில்லை. எங்கிட்ட என்ன குறைன்னே தெரியலை.நீங்க தான் கண்டு பிடிக்கணும்.

இது ஒரு மாணவனின் ஆதங்கம்.


எத்தனை நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படிப் படிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

தொடர்ந்து இடைவெளியின்றி மணிக்கணக்கில் படிப்பதால் மூளையில் பதியும் ஆற்றல் சாரசரி மாணவனுக்கு எப்படியுள்ளுத? முதல் ஒரு மணி நேரம் படிப்புத 100% பதிகின்றது என்றால், அடுத்த ஒரு மணிநேரத்தில் படிப்பதில் 50% தான் பதிகிறது. அடுத்த ஒரு மணிநேரம் படிப்பதில் 25% தான் பதிகிறது.

தொடர்ந்த படிப்பில் பதிவது பாதியாகக் குறைகிறது.

தொடர்ந்து நாள் முழுவதும் ஒரே வகைப் பாடத்தைப் (Subject ) படிக்கலாமா?

மறுநாள் அந்தப் பாடத்தில் தேர்வு என்றால் தான் ஒரே வகைப் பாடத்தைப் படிக்கலாம். அதையும் தொடர்ந்து படிக்கக் கூடாது. ஏன்?

மூளைக்கு போராடிக்கும், மூளையின் இயக்கம் மனம் சார்ந்தது.

காலை முதல், மாலை வரை அனைத்து வகுப்புகளும் ( Periods ) இலக்கண வகுப்பு ( Grammer ) என்று இருந்தால் மனம் ஒன்றாது.

மனம் ஒரு மாற்றம் விரும்பி.

எனவேதான், ஒவ்வொரு Periodக்கும் ஒரு Subject, அதைச் சொல்லித்தர வேறு, வேறு ஆசிரியர்கள்.

தொடர்ந்து மணிக்கணக்கில் படிப்பது தவறு எனில் நன்கு படிக்க? பதிய வைக்க என்ன வழி?

அதற்கு அருமையான வழிதான்,

ஒரு மணி நேரப் படிப்பு – 10 நிமிட புத்துணர்வு

One Hour Study – 10 Minutes Refreshment

ஒரு வகைப் பாடத்தை ஒரு மணி நேரம் படித்தோமெனில் அதை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து வெளியே வர வேண்டும். நீர் / பழச்சாறு ஒரு டம்ளர் அருந்திவிட்டு, வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு; மரம், செடி, கொடிகள், இருந்தால் அதனருகில் சென்றுவிட்டு, மீன் தொட்டி / வளர்க்கும் பிராணி இருந்தால் ஒரு நிமிடம் அதனிடம் உறவாடிவிட்டு, அன்னையிடம் அரை நிமிடம் அளவளாவிவிட்டு கீழ்க்கண்ட புத்துணர்வுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும.

1.00 மூச்சுப் பயிற்சி – 1 நிமிடம்

( தேர்வுகளில் சிறப்பான வெற்றி – 4ல் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது)

2. கண் பயிற்சிகள்

மூளைக்கு அடுத்தபடியாக உடலில் உள்ள மிக நுட்பமான, நிறைவாற்றலுக்கு அவசியத் தேவையான உறுப்பு கண்கள். மூளையின் அனைத்து செயல்களையும் செய்யும் ஒரே ஒரு கருவியைச் செய்ய முடியாது.

மிக அருகில் உள்ள பொருளைப் பார்க்க Microscope என்ற நுண்நோக்கியைப் பயன்படுத்துகிறோம். வெகுதூரத்தில் மரத்தில் அமர்ந்துள்ள ஒரு பறவையைப் பார்க்க Telescope என்ற தொலை நோக்கியைப் பயன்படித்துகிறோம். அவைகளைக் கொண்டு உடனே மரத்தில் உள்ள காகத்தைக் காண முடிகிறது. அனைத்தும் வினாடிக்கும் குறைவான நேரத்தில்.

எறும்பைப் பார்க்க கண் வில்லையின் குவிய தூரத்தை ( Focal lenth) குறைக்கவும் செய்யும் அற்றலை, விரைந்து செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன கண்கள்.

கண்களின் அருமைகளை அறிய ஒருநாள் முழுவதும் காந்தாரி போல் கண்களைக் கட்டியிருந்தால் தெரியும்.

இயற்கை நமக்களித்துள்ள விலைமதிப்பில்லாச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?

அதற்குத்தான் கண் பயிற்சிகள். இதனால் கண்களுக்கு குறைகள் வராமல் காக்கவும், வந்துள்ள குறைகளைப் போக்கவும் முடியும்.

கண்களைச் சிமிட்டுதல் ( Blinking ) :

இயல்பு நிலையில் கண்கள் பொதுவாக 15 லிருந்து 20 தடவைகள் மூடித் திறக்கும் தன்மை கொண்டவை. நாம் படிக்கும்போது, எழுதும் போது, படங்கள் பார்க்கும் போது இந்த எண்ணிக்கை குறையும். டி.வி.யில் கிரிக்கெட், வீடியோ கேம், போன்றவைகளைப் பார்க்கும் மாணவர்கள் ஆர்வம் மிகுதியால் மிக ஒன்றிப்போய் நிமிடக் கணக்கில் கண் சிமிட்டும் செயலை நிறுத்தி வைக்கின்றனர்.

கண் சிமிட்டும் நேரத்தில் அடிக்கும் Sixer அல்லது Four- ஐ தவறிவிடாமல் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு, Video Game -ல் Car Race மற்றும் Shooting போது Point to scrose அதிகரிக்க வேண்டும் என்ற ஆவல் போன்றவை மனதில் தோன்றுவதால், மனதின் கட்டளைக்கு கண்கள் கட்டுப்படுகின்றன. எனவே கண்கள் சிமிட்டுவது குறைகிறது.

இதனால் என்ன பாதிப்பு

பொதுவாக கண்களை மூடித்திறக்கும்போது கண்களின் வில்லை ( Lens ) வழியாக விழித்திரையில் ( Retina ) விழும் ஒளியானது வினாடியில் ஒரு பகுதி தடுக்கப் படுகின்றது. அச்சிறு நேரத்தில் கண்களில் உட்பகுதி, ஒளிவாங்கி நரம்புகள் ( Oprial rever ) ஒய்வெடுக்கின்றன. கண்களைச் சிமிட்டாமல் இருக்கும் போது, தொடர்ந்து உட்புகும் ஒளியால் விழித்திரை, ஒளிவாங்கி நரம்புகள் விரைவில் சோர்வடைகின்றன. கண் பதிவும் ( Eye fixation ), ஒருமித்த சிந்தனையும் ( Concentration ) பாதிப்புக்குள்ளாகின்றன.

காலையிலும், மாலையிலும் இரண்டு நிமிடங்களில் 30 – 40 தடவைகள் கண்களைச் சிமிட்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.

கண்களை அசைத்தல் மற்றும் சுழற்றுதல்

அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையோ கழுத்து, தலை, முதுகுத்தண்டு இவைகளை நேராக வைத்திருக்கவும். கழுத்தையோ அல்லது தலையையோ அசைக்காமல் கண்களை மட்டும் மேல்நோக்கிப் பார்க்கவும். கீழ்நோக்கிப் பார்க்கவும். கண்களை மூடவும். நான்கு முறை செய்யவும்.

இடது பக்கம் பார்க்கவும். வலது பக்கம் பார்க்கவும். கண்களை மூடவும். நான்கு முறை செய்யும்.

இடமிருந்து வலமாக நான்கு முறையும், வலமிருந்து இடமாக நான்கு முறையும் சுழற்ற வேண்டும். திசையை மாற்றுபோது கால் நிமிடம் கண்களை மூடித் திறக்க வேண்டும். காலை, மாலை அவசியம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள தசைநார்கள், கண் கருவிழி வில்லைகள், ஒளிமூடி ( Iris ) விழித்திரை போன்றவைகள் நல்லியக்கம் பெறும். கிட்டப்பார்வை ( Short sight),தூரப்பார்வை ( Long sight ) கேளாறுகள் நீங்கும். கண்கள் பதிவது ( Eye fixation ) விரைந்து நடைபெறும். இதனால் விரைந்து படிக்க முடியும்.

கண்களைக் கழுவுதல்

காலை முதல், இரவு வரை நாம் நம் அன்றாட வேலைகளைச் செய்து வரும்போது சுற்றுப்புறச் சுழல் ஏற்படுத்தும் தூசிகள் கண்களில் படுகின்றன. அவற்றை அகற்ற வேண்டியது அவசியம். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான நீரை எடுத்துக் கொள்ளவும். தலையைக் குனிந்து கண்ணை அந்நீரில் படவைத்து, இமைகளை மூடித்திறக்க வேண்டும். இதனால் கண்களில் கோளகப் பரப்பில் படியும் தூசிகள் நீர்மூலம் கழுவப்பட்டு வெளியேறும். காலை, மாலை அவசியம் செய்ய வேண்டும்.

குளிர்ப்பட்டி ( Cold pack)

” அம்மா நான் ராத்திரி 12 மணி வரைக்கும் படிக்கணும். எனக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டீ / காப்பி போட்டுத் தரணும்.”

தன் மக்களுக்காக கண் விழித்திருந்து மணிக்கொரு முறை டீ / காப்பி போட்டுத்தரும் அன்னைகளும் உண்டு. அதை அருந்திவிட்டு தூங்கும்வோரும் உண்டு.

டீ / காப்பியால் தூக்கத்தைப் போக்கிட முடியுமா? அதனால் தொடர்ந்து புத்துணர்வுடன் படிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. உடல் நலத்திற்குத் தான் கேடு.

எந்தவித செலவுமில்லாமல், உடல் நலத்திற்கும் பாதிப்பு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருக்க வேண்டும். காலை, மாலையில் அவசியம் செய்ய வேண்டும்.

இரண்ணு வகுப்புகளுக்கு ( Periods ) இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில், தேர்வு சமயங்களில், கண்விழித்துப் படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்திற்கு இடையேயும் இதைச் செய்வுத மிகச் சிறந்தது. ஒரு நிமிடம் செய்தால் கூட போதுமானது.

3. சாந்தி ஆசனம் : ஒரு விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும். உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்து இடுப்புக்கு அருகே இருக்கட்டும். கால்கள் சற்று அகன்று இருக்கட்டும், கண்களை லேசாக மூடிய நிலையில், இரண்டு நிமிடங்கள் ஒவ்வொரு மணி தொடர்ந்த படிப்பிற்கிடையே இருப்பது நலம்.

4. தியானம் : முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவற்றை ஒரே நேர் கோட்டில் வைத்து சித்தாசனம் / பத்மாசனம் நிலையில் ( ஆசனங்கள் பற்றி எழுதும் போது விரிவாக தெரியும் ) அமரவும்.

நான் பிரபஞ்சம் சக்தி பொழிவில் உள்ளேன், இதோ என் உடல் உள் உறுப்புகள் அதன் நல்லியக்கத்திற்குத் தேவையான சக்திகளை ஈர்த்துக் கொள்கிறது. உடலும், மனமும் அமைதியாக உள்ளது. நான் படிக்கும் பாடங்கள் நன்கு புரிகிறது. நன்கு பதிகிறது. நான் நினைக்கும் போது படித்ததை என்னால் சொல்லவோ / எழுதிவோ முடியும். எனது நினைவாற்றல் அதிகமாகி வருகிறது. ஒரு மித்த சிந்தனை உயர்ந்து

முன்னேறிக் கொண்டே வருகிறேன் என்று மனதை புருவ மத்தியில் வைத்துச் சொல்லிக் கொள்ளவும.

வீட்டை சுற்ற, அளவாளாவ – 2 நிமிடம், OX – மூச்சுப்பயிற்சி – 1 நிமிடம் உள்ளங்கை சிகிச்சை -1 நிமிடம், குளிர்ப்பட்டி – 2 நிமிடம், சாந்தி ஆசனம் – 2 நிமிடம், தியானம் -2 நிமிடம் ஆக மொத்தம் 10 நிமிடங்கள்.

ஒரு மணிக்கொருமுறை இப்பத்து நிமிட பயிற்சிகளைச் செய்தால் நீங்கள் புத்துணர்ச்சியை, புதிய தெம்பை, உற்சாகத்தை, உத்வேகத்தைப் பெறுவீர்கள். அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது 100% பதியும்.

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...