இணையத்தில்
இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ,
ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி
கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல்
அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு
மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து
அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல்
தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு
உதவி புரியும்.
Anonymous
Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும்
ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை
கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே
உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை
கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...