
வாழும் போதே நீ அறிதல் வேண்டும்
வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும்
வாழ்ந்தால் இவனை போல வாழ்ந்து மடியவேண்டும்
வாழ்ந்த பின் உன் வரலாறு சொல்லவேண்டும்!
ஊருக்கு என்றும் நீ பயன் படவேண்டும்
உண்மை சொல்லி வாழ்ந்திடவேண்டும்
அடுத்தடுத்து இன்னல்கள் வந்தாலும்
தடுத்து,வெற்றியோட நீ வாழ வேண்டும்!
இருக்கும் காலம் உனக்கு கொஞ்சம் தான்
இன்னும் நீ கற்க,கடக்க வேண்டும்தான்
இருக்கும் வரை வாழ்க்கை போராட்டம் தான்!
இறக்கும் போதும் இன்னல்கள் வந்து சேரும்தான்!
நன்மை என்பது உன் நண்பன்தான்
நீ அழைத்தால் உடன் வருவான் தான்!
கைகள் களைப்பின்றி தொடங்கும் வேலை
கழுத்துக்கு வந்து சேரும் வெற்றி மாலை
ஊருக்கு என்றும் நீ பயன் படவேண்டும்
உண்மை சொல்லி வாழ்ந்திடவேண்டும்
அடுத்தடுத்து இன்னல்கள் வந்தாலும்
தடுத்து,வெற்றியோட நீ வாழ வேண்டும்!
இருக்கும் காலம் உனக்கு கொஞ்சம் தான்
இன்னும் நீ கற்க,கடக்க வேண்டும்தான்
இருக்கும் வரை வாழ்க்கை போராட்டம் தான்!
இறக்கும் போதும் இன்னல்கள் வந்து சேரும்தான்!
நன்மை என்பது உன் நண்பன்தான்
நீ அழைத்தால் உடன் வருவான் தான்!
கைகள் களைப்பின்றி தொடங்கும் வேலை
கழுத்துக்கு வந்து சேரும் வெற்றி மாலை
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...