Monday, 19 November 2012

நட்சத்திர குள்ளர்கள் பற்றிய விண்வெளி ஆய்வு



நட்சத்திரங்களை சாதாரண டெலஸ்கோபில் பார்க்க முடியும். எறிந்து போன நட்சத்திரங்களை நட்சத்திர குள்ளர்கள் அல்லது ஊதா குள்ளர்கள்[ Brown Drawfs ] என குறிப்பிடுகிறார்கள்.





இந்த குள்ளர்கள் நமது சோலார் சிஸ்டத்தின் அருகில் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். இவைகள் ஒளிரும் தன்மை குறைவாக இருப்பதால் சாதாரண டெலஸ்கோபில் பிடிபடவில்லை. நாசாவின் [ NASA ] வைஸ் [WISE - Wide field Infrared Survey Explorer ] தொலை நோக்கி மூலமே பார்க்கப் பட்டிருக்கிறது. பின்னர் ஸ்பிட்சர், ஹப்பில் இவைகளால் உறுதிப் படுத்தப் பட்டது. இவை எதனுடைய கட்டுப் பாட்டிலும் அதாவது ஈர்ப்பில் இல்லை. இதனுடைய குறைந்த எடை ஒரு காரணம்.

நட்சத்திர குள்ளர்கள் 9 முதல் 40 ஒளி ஆண்டு தொலைவில் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள்.
நட்சத்திர குள்ளர்கள் இதுவரை 100 கண்டறியப்பட்டுள்ளன.
சூரியனுடைய மேல் பகுதியில் வெப்பம் 9940 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள்.

நட்சத்திர குள்ளர்கள் மூன்று வகையாக பிரித்துள்ளார்கள்.
அவற்றில் 6 மிகக்குறைந்த வெப்பநிலையில் இருப்பதாக அதாவது 80 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள் இவை Y- Drawfs முதல் வகை. இரண்டாவது வகை L – Drawfs அதிக வெப்பம் 2600 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள். மூன்றாவது வகை T – Drawfs வெப்பம் 1700 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள்.

இந்த குள்ளர்களின் ஆராய்ச்சி இன்னும் பல அண்டத்தின் ரகசியங்களை விளங்ககிட உதவும்.
நட்சத்திரம் குள்ளனாக உருமாற்றம் எப்படி ?,
குறிப்பாக இவைகளை ஒத்த பிரம்மாண்ட கோள்களின் ஒப்புமை.
ஈர்ப்பு தன்மை இப்படி பல கேள்விகளுடன் ஆராய்சி தொடர்கிறது…

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...