Monday, 19 November 2012

ஒளியை விட வேகமானதா நியூட்ரினோ…?



இதுநாள் வரையான காலப் பகுதிவரை மனிதனால் உவமை கூறக்கூடியதற்கு ஏற்ப வேகமாக  ஒளியின் வேகமே அதிகூடியது என்று கூறப்பட்டுவந்தது.ஆனால் தற்போது  அந்தக் கருத்துக்கு மாற்றாக ஒளியைவிட வேகமாக அல்லது ஒளிக்கு சமமான வேகத்தில் பயணம் செய்யக் கூடியவையும் உண்டு என ஆய்வாளர்களினால் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


ஒளியின் வேகமானது வெற்றிடம் ஒன்றில் அது பயணம் செய்வதை வைத்து கணக்கிடப் படுகின்றது. வெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகமானது ஒரு அடிப்படை மாறிலி எனவும் அதன் வேகம் மாறாமல் சீரான வேகத்தில்  பயணம் செய்யும் எனவும் கூறப்படுகின்றது.  தங்கு தடைகளற்ற வெற்றிடத்தில் ஒளியானது  ஒரு விநாடியில் கடக்கும் தூரம் 299,792,458  மீற்றர்களாகும் (மணிக்கு 1080 மில்லியன் கிலோமீற்றர்). சூரியனின் ஒளியானது  சராசரியாக 150 மில்லியன் கிலோமீற்றர்கள்  தொலைவில் இருக்கும் பூமியை  வந்தடைய  08 நிமிடங்கள் 19 விநாடிகள் ஆகின்றது.     ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் வேகம் தான் இப்பிரபஞ்சத்தில் வேகத்தின் எல்லையாகும் என இதுநாள் வரை  கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின் சார்பியல் தத்துவத்தையே மறுபரிசீலனை செய்யும் நிலைப்பாட்டினை உருவாக்கும் வண்ணம் கண்டுபிடிப்பொன்றை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். அது தான் நியூட்ரினோ (Nutrino).
     

நியூட்ரினோ(Nutrino) எனப்படுவது ஓர் அணுவாகும். அணு என்பதைவிட அணுவில் உள்ள பல்வேறுபட்ட துகள்களில் இது ஒரு அடிப்படைத் துகளாகும். அணுவின் அடைப்படைத் துகள்கள் பகுக்கமுடியாத(மேலும் பிரிக்க முடியாத) தன்மை கொண்டவைகளாக கூறப்படுகின்றது. நியூட்ரினோவானது ஒளியை விட வேகத்தில் பயணம் செய்யக் கூடியது என்று 2011ஆம் ஆண்டு புரட்டாசி (September) மாதம் ஆய்வுக்குழு ஒன்றினால் முடிவுகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பின்பு இதனை உறுதி செய்யும் நோக்கில் மீண்டும்  2011 ஆம் ஆண்டு ஐப்பசி(October) மாதம் ஆய்வுகள் நடாத்தப் பட்டு, ஏற்கனவே கூறப்பட்ட கருத்து வழுவற்றது என நிறுவப்பட்டது.


ஆனாலும் இதே ஆய்வு இன்னொரு ஆய்வுக் குழு ஒன்றினால் கடந்த பங்குனி (March 2012) மாதம்  ஆராயப்பட்டு ஒளியின் வேகத்திலும் நியூட்ரினோவின் வேகத்திலும் வேறுபாடுகள் இல்லை எனவும்  இரண்டுமே சம அளவானா வேகத்தையே கொண்டவை என கூறியுள்ளனர். எவ்வாறாயினும் எனினும் நியூட்ரினோவின் வேகமானது ஒளியின் வேகத்தைப் போன்று இன்னமும் எண்களில்  வரையறுக்கப்படவில்லை. இனி எதிர்காலத்தில் மென்மேலும் நிகழப்போகும் ஆய்வுகளின் முடிவுகளிலேயே சரியான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...