Monday, 18 June 2012

சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து ஜேர்மன் உலக சாதனை!



சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.




No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...