Wednesday, 13 June 2012

புதிய கண்டுபிடிப்புகள்

நினைப்பதை கண்டுபிடிக்கலாம்!

"நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே'' என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். உடற்கூறு மற்றும் உளவியல் பற்றி படித்தவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை ஓரளவு கணித்துக் கூறுவார்கள். அதேபோல் உங்கள் எண்ணங்களை கண்டுபிடித்துச் சொல்லும் வகையில் ஒரு கணினி மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த மென்பொருளை உருவாக்கி உள்ளது. 'மைண்ட்ஸ் ' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த மென்பொருள் நாம் நினைப்பதை புட்டுப்புட்டு வைத்து விடும்.

பலருக்கு வீடியோ காட்சிகளை ஓடவிட்டுக் காட்டி அவர்களின் மூளையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. அப்போது மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இந்தக் காட்சிகள் எவ்வாறு பதிகிறது என்பதை மின்னணு சிக்னல் வடிவில் `டிகோடு' செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டது.

ஒருவர் தான் சொல்ல வந்ததை வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவர் நினைப்பதை வைத்தே இந்த 'டிகோடு'கள் பதிவாகிவிடும். இதனால் அவர் பேசசில் ஒன்றும், நினைப்பில் ஒன்றும் வைத்திருந்தால் காட்டிக் கொடுத்துவிடும்.

50 சதவீத அளவில் இந்த எண்ண அலைகள் சரியான விவரங்களைத் தந்தன. மேலும் பலரின் எண்ண அலைகள் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்தால் இதில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. இதுவரை உண்மை அறிவதற்காக ஹிப்னாடிசம் அல்லது மின்அதிர்வூட்டும்முறை வழக்கில் இருந்து வருகிறது. இது அதற்கு மாற்று வழியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க இந்த 'மைண்ட்ஸ் ' மென்பொருள் பெரிதும் கைகொடுக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

"இப்போ நீங்க என்ன நெனக்கிறீங்களோ? அது அந்த கம்பியுட்டருக்கே வெளிச்சம்!''

1 comment:

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...