Wednesday, 13 June 2012

உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி

Angel Falls in Venezuela

 
  Angel Falls in Venezuela
                  அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்!
சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன.
இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun ​​Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள். அப்படியென்றால் ஏன் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்கிறார்கள் என ஜோசிக்கிறீர்களா?
1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இவ் நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...