Wednesday, 15 August 2012

பூமி வாழ, கரப்பான்பூச்சிகள் வேண்டும்!


Cockroach1
கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே இல்லத்தரசிகள் பலரும் அலறியோடுவார்கள். ஆனால் பூமி என்றென்றும் ஜீவித்திருக்க, இந்தச் சிறு பூச்சிகள் அவசியம் என்கிறார் ஒரு விஞ்ஞானி. பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கரப்பான்பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்கிறார் இவர்.
ஸ்ரீனி கம்பம்படி என்ற அந்த இந்திய வம்சாவளி ஆய்வாளர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர். அவர், உலகின் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வகையான கரப்பான்பூச்சி இனங்கள் திடீரென மறைந்திருப்பது கவலைக்குரியது என்று வருத்தப்படுகிறார்.
“பெரும்பாலான கரப்பான்பூச்சிகள் அழுகும் கழிவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன. பின்னர் தாங்கள் வெளியேற்றும் கழிவின் மூலம் பூமிக்கு நைட்ரஜனை செலுத்துகின்றன. அந்த நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன” என்று விளக்கம் அளிக்கிறார் ஸ்ரீனி.
எனவே இனிமேல் நாம் கரப்பான்பூச்சிகளைப் பார்த்து முகம் சுளிக்காமல் இருப்போம்!

பாப்கான் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்


ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.
மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

அதிநவீன தொழில்நுட்பத்தில் பூகம்ப எச்சரிக்கைக் கருவிகள்



பூகம்பம், எங்கோ ஓரிடத்தில் பிறந்து சில நொடிகளில் உலகையே உலுக்கச் செய்யும் அற்ப ஆயுள் கொண்ட குழந்தையை என்ன சொல்வது? "பூகம்பம்'' என்ற பெயர் கொண்ட அரக்கக் குழந்தை பிறந்து கண்ணை மூடி திறப்பதற்குள் பல உயிர்கள் மூடிவிடுகின்றன. ஏழை, பணக்காரர்கள், பச்சிளங்குழந்தைகள், முதியவர்கள், குடிசை, மாட மாளிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தன் அகோரப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிறது.

மனித சமுதாயத்தையே நிலைகுலையச் செய்கிறது. இயற்கை அவ்வப்பொழுது ஆடும் ருத்ரதாண்டவங்களில் மிகக் கொடியதான ஒன்றாக பூகம்பம் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு அடியும் மரண அடிதான். இதன் அடி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் வல்லமைப் பெற்றது. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இப்பேரழிவிற்கு சாவு மணி அடிக்க பல விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தடுக்க முடியுமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை முன்கூட்டியே அறிந்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததன் நற்பலனாக அமைந்தன இத்தொழில் நுட்பம்.


பூகம்பத்தைப் பற்றி தற்போது இருக்கும் முன்னறிவிப்புக் கருவிகள் அவ்வளவு துல்லியமாக இல்லை. இதுவரை நடந்துள்ள பூகம்பங்கள் சாட்டிலைட் கருவிகள் மூலம் புவித் தட்டு நகர்வதை கண்காணிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அதாவது ஒரு பத்து ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ அல்லது 30 ஆண்டுகளிலோ ஏற்பட இருக்கும் பூகம்பங்களை அதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே அறிவித்தன. ஆனால் குறைந்த கால அவகாசத்திற்குள் நடைபெற இருக்கும் பூகம்ப முன்னறிவிப்புகள் மூலம் உயிர் சேதத்தை தவிர்ப்பதோடு இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காது.

பூகம்பம் நடைபெறுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் சுரங்கப்பாதையை கடக்கும் ரயில் அதனைவிட்டு கடந்துவிடுவதன்மூலம் ஆபத்தை தவிர்க்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் மூலம் மக்களை கட்டிடத்தின் பாதுக்காப்பான இடத்திற்கோ அல்லது பாதுகாப்பற்ற கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றியோ வீடுகளில் வரும் சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்களை அடைப்பதன் மூலமாகவோ ஆபத்தை தவிர்க்கலாம்.

மேலும் தொழிற்சாலைகளிலுள்ள ஊழியர்கள் ஆபத்தான பணிகளை உதாரணமாக சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் உயரமான கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையடைந்து தப்பிக்கலாம். முக்கியமான கோப்புகள் மற்றும் கணிப்பொறியில் உள்ள தரவுகளை  அழியாமல் பாதுகாத்து வைக்க முடியும். அரசாங்கமும் எச்சரிக்கையடைந்து சிரத்தையான பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலகங்களில் உள்ளவர்களை எச்சரித்து பாது காக்கலாம்.


ஒருநாள் முன்னதாக பெறப்படும் எச்சரிக்கையினால் மக்கள் குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுடன் இடம் பெயர்வதற்கு வழிவகுக்கிறது. அர சாங்கமும் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளிலுள்ள மக்களை உஷார்படுத்துவதோடு அவசரகால நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் ஆயத்தமாக முடியும். இதன்மூலம் பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறியமுடியும் அறிவிக்கவும் வேண்டும் என்பது புலனாகிறது.

அகச்சிவப்பு கதிர்கள்  மூலம் முன்னறிவிப்புகள்:

விண்கலங்கள் அகச்சிவப்புக் கதிர்களை கண்டறிவதன் மூலம் பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணமுடியும். சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்களை பெறுவதன் மூலம் முன்னறிவிப்புகளை பதிந்துள்ளனர்.

நாசாவின் தெர்மால் அனாமெலி என்ற விண்கலத்தின் மூலம் 21 ஜனவரி 2001ல் அதாவது குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் அறிகுறிகளை பெற்றது. இந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கடியிலுள்ள பாறைகளின் அசைவுகள், ஏற்படும் துளைகள் ஏற்படுவதன் மூலம் எலக்ட்ரான்கள் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுவதால் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் பெறப்படுகிறது என்று நம்புகிறார்கள்.

தரைக் கண்காணிப்பு நிலையம் மற்றும் விண்கலம்:

தரைக் கண்காணிப்பு நிலையத்தை விட விண்கலம் (சாட்டிலைட்) மூலம் கண்காணிப்பது சிறந்ததாக இருக்கிறது. தரைக் கண்காணிப்பு நிலையத்தில் குறைந்த அளவு பரப்பளவில் நிகழக்கூடிய புவிப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை மட்டுமே அறிய முடியும். அதாவது 50 கிலோமீட்டர் சுற்றளவில் நிகழக்கூடிய புவிமாற்றங்களை மட்டுமே உணரிகளின் தன்மைக்கேற்ப அறிய முடியும். ஆனால் விண்கலம் மூலம் அறியப்படும் அறிகுறிகள் பூமியில் அதிகபட்ச இடங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கலாம்.


இன்னும் சில தொழில் நுட்ப சவால்களை ஆராய்ச்சியாளர்கள் சந்தித்து நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஒலி அதிர்வுகளைப் பெறும் விண்கலங்கள் ஏற்கனவே அங்கு ஏற்படுகிற ஒலி மற்றும் புவியில் செயற்கையாக ஏற்படுகிற (எந்திரங்கள் மற்றும் இதர இரைச்சல்கள்) ஒலிகளிலிருந்து புவித்தட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஒலிகளை வேறுபடுத்துவதன் மூலம் உண்மையான பூகம்ப அறிகுறிகளுக்கான சமிக்ஞைகளை பெற வேண்டியிருக்கின்றது.

பூகம்ப முன்னறிவிப்புக் கருவிகளை நிறுவுவதற்கான செலவு:

கலிபோர்னியாவில் நிறுவப்பட்டுள்ள தரை நிலைய உணரி கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு மட்டும் 50 லட்சம் முதல் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது. இதே விண்கலம் மூலம் உணரியை நிறுவுவதற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது.

பூகம்ப முன் எச்சரிக்கை ஆராய்ச்சி மற்றும் அதற்கான கருவிகளை நிறுவுவதற்கான செலவு அதிகம் தான். ஆனால் பூகம்பம் ஏற்பட்டப்பின் ஏராளமாக ஆகும் உயிர்ச் சேதம், பொருட் சேதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இது சர்வ சாதாரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு, இராணுவம் இவற்றிற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது விலைமதிக்க முடியாத எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு இச்செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

அதை லேசாக விட்டுவிடவும் முடியாது. எந்த விலை கொடுத்தாகிலும் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். இம்மாதிரியான எச்சரிக்கைகள் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு இடர்களை தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தவிர்த்து விடலாம். பீதியும், அச்சமும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையை மேற் கொள்ளலாம். மனிதர்களையும் அபாயகரமான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம். எல்லாம் நடந்து முடிந்தபிறகு மறுவாழ்வு, நிதி என்று ஒதுக்குவதைவிட அதற்கு முன்பே இத்தகைய அதிநவீன உயிர்காக்கும் ஆய்வுகளில் செலுத்தப்படும் முதலீட்டின் மிகப்பெரிய இலாபம் மனித உயிரைவிட வேறு என்னவாக இருக்க முடியும்!

செவ்வாய் கிரகத்தால் பூமிக்கு ஆபத்தா?


வானவியல் நிபுணர்களின் கருத்துபடி, செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வருவதாக கருத்து நிலவுகிறது. கடந்த ஆண்டிலிருந்தே உலகில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக டிசம் பர் 2004-ம் ஆண்டு ஆசிய நாடுகளை துக்க நாடாக்கிய சுனாமி மற்றும் அதை தொடர்ந்து அமெரிக்காவில் சூறாவளி மற்றும் இன்று பாகிஸ்தான் பூகம்பம் போன் றவற்றை குறிப்பிடலாம்.

இயற்கை சீற்றங்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடல் அலைகளும் முன்புபோல் சீரான நிலையில் இல்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் செவ்வாய் கிரகம் பூமியை நோக்கி வருவதும் கூட இதன் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா போன்ற பிரபல நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 55.7 மில்லியன் (5 கோடியே 57 லட்சம்) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா?


`காத்ரீனா', `ரீட்டா', `வில்மா' இதெல்லாம் ஏதோ பிரபல டென்னிஸ் வீராங்கனை பெயர்கள் போல் எண்ண தோன்றுகிறதா?. அதுதான் இல்லை. இவைகளெல்லாம் சமீபத்தில் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய சூறாவளிகள். `ஊரை அடித்து உலையில் போடவேண்டும்' என்று சொல்வது இதற்குத் தான் பொருந்தும். இந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த பேரிடியாக பாகிஸ்தான், காஷ்மீர் பூகம்பங்கள்.

உலகின் அனுதாபப் பார்வை நியூ ஆர்லியன்ஸிலிருந்து ஆசியாவின் பக்கம் திரும்பி விட்டன. முன்பெல்லாம் ஒரு இயற்கை பேரழிவிற்கும் மற்றொரு இயற்கை பேரழிவிற்கும் நீண்ட இடைவெளி இருக்கும். எப்பொழுதாவதுதான் நடக்கும். எல்லாமே கொரில்லா தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? சூறாவளி, புயல் இவைகள் மனிதனுடைய உடைமைகளை அப்படியே விழுங்கிவிடும் ஒரு ராட்சத அரக்கன்.

நிலவில் காலடி வைக்க முடிகிற நம்மால் ஏன் இதை நிறுத்த முடியாது அல்லது இதன் வேகத்தையாவது கட்டுப்படுத்த முடியுமா ? அல்லது குறைந்தபட்சம் குறைக்க முடியுமா? என்று விஞ்ஞானிகளின் கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் இயற்கை சீற்றமான சூறாவளியை எப்படி தடுக்கலாம் அல்லது குறைந்த பட்சம் எப்படி அதன் தீவிரத்தைக் குறைக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து வருகிறார்கள்.

1906-ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை 7.8 ரிக்டரில் உலுக்கியது பூகம்பம். ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின. கிட்டத்தட்ட 3ஆயிரம் மக்கள் இறந்தனர்.

1944-ம் ஆண்டு இத்தாலியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரபலமான விசுவையஸ் எரிமலை குமுறியதில் சுமார் 150 பேர் இறந்து போனார்கள். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வு பலம் வாய்ந்த கட்டிடங்கள் தரைமட்டமானதோடு பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

சுமத்ரா தீவின் கடற்பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 30 அடி உயர சுனாமிக்கு வித்திட்டது. பல லட்சக்கணக்கானோர் உயிரி ழந்தனர். உலகின் ஒட்டுமொத்த கவனமும் சுனாமி பாதித்த பகுதிகளை நோக்கி நகர்ந்தன.

இவ்வளவு அறிவியல் வளர்ந்தும் நாம் இன்னும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இயலாத, சக்தியில்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடந்த நூற்றாண்டுகளாக உலகின் மக்கள் தொகை பல மடங்காக உயர்ந்திருக்கிறது. 1906-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் பூகம்பம் ஏற்பட்டபோது உலகின் மொத்த மக்கள் தொகை 160 கோடி தான்.

இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது நம்மை தாக்கி கொண்டே இருக்கிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களில் வாழும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு மாறினால் தவிர இத்தகைய பேராபத்து களிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமாகுமா? என்பதுதான் கேள்விக்குறி.

வேறு என்னதான் மாற்றுவழி. சமீப பத்தாண்டுகளாக சில நவீன யுத்திகள் விஞ்ஞானிகளின் அறிவு பார்வையில் இதற்கான வழிமுறைகள் தென்பட்டு வருகின்றன.

விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வமுள்ள வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானிகள் ஏராளமான திட்டத்தை கண்டறிந்தார்கள். இதில் விண்வெளியிலிருந்து வெப்பக்கதிர்களை சூறாவளி கடக்கும் கடற்கரையின் பாதையில் இராட்சத காற்றாலை எந்திரங்களின் மூலம் பாய்ச்சுவது. ஆனால் இதில் உறுதியான நிலை தென்பட வில்லை.

அமெரிக்க அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதாவது விமானங்களிலிருந்து வெள்ளி அயோடைடுகளை சூறாவளி வீசப்போகும் இடங்களிலுள்ள கருமேக மண்டலங்களில் தூவ வேண்டும். இதன்மூலம் வெப்பச்சலனம் ஏற்பட்டும் சூறாவளியை பலவீனமடையச் செய்து விடுகிறது. 1961ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் 4 முறை இந்த முறையை மேற்கொண்டுள்ளனர்.


அமெரிக்காவின் சூறாவளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ஹப் வில்லோபி ஒரு திட்டத்தை வகுத்தார். உட்க்ஞுஹஙீஙீ தக்சிஙீஹஷக்ஙுக்ஙூஞ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் சூறாவளியின் தீவிரத்தை நிலைகுலையச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார். இம்முறையைப் பயன்படுத்தி டெக்சாஸ் மாநிலத்தை நோக்கி படையெடுத்த ரீட்டா சூறாவளியை பலவீனமடையச் செய்தார்கள். ஹப் கூறுகையில், "இந்த முறைக்கு 50 மில்லியன் டாலர்கள் செலவாகியது'', என்கிறார்.

மற்றொரு அணுகுமுறையான கடற்பஞ்சுகளை ஜெட் விமானங்கள் மூலம் வீசச் செய்வது. இம்முறையின் மூலம் சூறாவளியின் வேகத்தை தகர்க்க முடியும். மற்றொரு முறையில் வடதுருவப் பிரதேசத்திலிருந்து பெரிய பனிப்பாறைகளை உஷ்ண பிரதேசத்திற்கு இழுப்பதன் மூலம் அப்பிரதேசத்தை குளிரடையச் செய்ய முடியும். இதன் மூலமும் கடும் சூறாவளியை கட்டுக்கு கொண்டுவரலாம்.

தேசிய இயற்கை பேரழிவு மையத்தின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் சிம்ப்ஸன் எண்ணெயை விமானங்கள் மூலம் தெளிப்பதன் மூலம் அதன் வேகத்தை வலுவிழக்கச் செய்யமுடியும் என்பதை கண்டறிந்தார். 1970-ம் ஆண்டு ரஷ்யாவில் இந்தமுறை சோதிக்கப்பட்டது. அதனால் எதுவும் பலன் ஏற்பட்டதா என்பதை அறியமுடியவில்லை.

பத்து ஆண்டுகளாக அனைத்து முறைகளையும் கேட்டறிந்த வில்லோபி, அவர் "கட்டிட நூலிழைக் கண்ணாடியின் மூலம் கடல் மேற்பரப்பிலுள்ள நீரை உறிஞ்சுவதன் மூலம் வளைகுடா பகுதியை குளிரடையச் செய்யவேண்டும். இதுவும் சூறாவளியைக் கட்டுப்படுத்தும் என்ற வழிமுறையாகக் கண்டறிந்தார்.

புயல், சூறாவளியினால் பூமியினுடைய வெப்பப் பிரதேசத்தில் இருக்கும் அதிக வெப்பத்தை வெளியேற்றுகிறது. மேலும் மாசுவையும் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மாஸாசூஸ்ஸட் மாகாணத்திலுள்ள ஒரு தனியார் ஆராய்ச்சிக் கழகத்தின் வான்மண்டல ஆய்வாளர் ராஸ் ஹோப்மேன் தன்னுடைய ஆராய்ச்சியில் கண்ணாடிகளின் உதவியுடன் செயற்கைக் கோள்களின் மூலம் சூரியக் கதிர்களை பாய்ச்சுவதன் மூலம் சூறாவளியின் மற்றும் புயலின் தன்மையை மாற்றிவிடலாம் என்கிறார்.


MIT-யின் வேதியியல் பொறியியல் வல்லுனர் ராபர்ட் லேஞ்சர் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது சூறாவளி உருவாகும் பிரதேசத்தில் நீராவியை எந்திரத்தின் மூலம் உறிஞ்சுவதன் மூலம் தடுக்கமுடியும் என்று தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். இது சிம்ப்ஸனின் எண்ணெய் தெளிக்கும் முறைக்கு மாற்றுமுறையாகும்.

வில்லோபி வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு முறையை பரிசீலனை செய்தார். அதாவது சூறாவளி நகரும் பாதையில் ராட்சத துணிகளை இழுத்துக் கட்டுவதன் மூலம் கட்டுப்படுத்தும் முறை. ஆனால் இம்முறைக்கு கொலம்பியா மாவட்டத்தின் அளவைப் போல் 10 மடங்கு துணி தேவைப்படுகிறது.

இயற்கை சீற்றங்களை முழுவதும் முறியடிக்க இயலாவிட்டாலும் ஓரளவு அதற்கான சாத்தியக்கூறுகளை நவீன விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி எவ்வாறு குறைக்கலாம். எந்தத் தன்மையில், சூழ்நிலைகளில் உருவாகிறது? அதற்கான மாற்றுவழி என்ன? இயற்கை வளம் மற்றும் இயற்கை சூழ்நிலைகளில் அறிவியலை திணிப்பதால் புவியின் சீற்றத்திற்கு ஆளாகிறோமா? என்பதை கண்டறிய வேண்டும்.

எது எப்படியிருந்தாலும் இயற்கை சீற்றங்கள் எல்லாம் பூமியின் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. இயற்கையாகவே நிலையற்ற தன்மையில் உள்ள பூமியில் வாழ்வதற்கு நாம் கொடுக்கும் விலையே இயற்கை. மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையாக வாழ்ந்து அனுபவித்தான்.

ஆனால் இன்றைய நவீன உலக மனிதன் இயற்கையினை தன் வசப்படுத்த முயலும்போது இயற்கையினை, பூமியினை, கடலினை மற்றும் இயற்கை அம்சங்களை துளைத்து, வருத்தி பல சாகசங்களை, அதிசயங்களை செய்யும்போது இயற்கை பூகம்பம், சூறாவளி, புயல், காற்று, மழை, சுனாமி, பஞ்சம் போன்ற தன்னுடைய இன்னொரு (கோர) முகத்தை காண்பிக்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இயற்கையினை கையகப்படுத்த மனிதனின் எல்லையில்லா முயற்சியே!

.


 

HP அறிமுகப்படு​த்தும் புதிய Slate 8 கணினிகள்!



கணனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான HP ஆனது Slate 8 எனும் நவீன ரக கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த புதிய கணனியானது 10.1 அங்குல திரையைக் கொண்டதாகக் காணப்படுவதுடன், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது தொடர்ச்சியாக எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி!



இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம்.ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும்.எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!



உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தைவிரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.


குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக!


அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விடயம் உள்ளது.அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும்.

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள்: நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர்.அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை: எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும்.ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது.மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி: கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...