Thursday, 11 October 2012

ஹபிள் தொலைக்காட்டியால் எடுக்கப் பட்ட பிரபஞ்சம் பற்றிய அதியுயர் படங்கள்!!

விண்வெளியில் பூமியைச் சுற்றி வலம் வரும் அதியுயர் திறனுடைய ஹபிள் விண் தொலைக் காட்டி (HST) பிரபஞ்சம் பற்றிய அதி நுண்ணிய புகைப்படங்களைப் படம் பிடித்து சமீபத்தில் பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்புகைப் படங்கள் பிரபஞ்சத்தில் மிகுந்த தூரத்தில் உள்ள அண்டங்களையும் நட்சத்திரங்கள் தோன்றிய புதிதில் எவ்வாறு மின்னத் தொடங்கின என்பதையும் தெரிவிக்கின்றன.எனினும் இப்புகைப்படங்கள் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் அமையவில்லை. இதற்குக் காரணம் இப்புகைப்படங்களில் காணப்படும் சில அடையாளங்கள் அதிக தூரத்திலும் செறிவு குறைவாகவும் உள்ள நட்சத்திரங்களைக் குறிப்பதனால் ஆகும். மேலும் குறித்த இந் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை கண்டு பிடிப்பதற்கு வானில் உள்ள ஒரு சிறிய புள்ளியில் 500 மணித்தியாலங்களுக்கு மேல் ஹபிள் தொலைக் காட்டி கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு எடுக்கப் பட்ட புகைப்படம் மிகவும் தரமாக உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான Dr. Michele Trenti கருத்துத் தெரிவித்துள்ளார்.இப்புகைப் படங்கள் யாவும் ஹபிளின் XDF (eXtreme Deep Field ) எனும் நவீன தொழிநுட்ப வசதியுடைய கமெராவால் சுமார் 22 நாட்களாக எடுக்கப் பட்டவையாகும். இத் தொழிநுட்பம் மூலம் அண்டங்கள் தோன்றி எவ்வாறு பரிணாமம் அடைந்து வருகின்றன என்பதை அவதானிக்க முடியும்.எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப் படவுள்ள James Webb Space Telescope, ஹபிள் தொலைக்காட்டியை விட அதி உயர் தரமுடைய லென்ஸ் மற்றும் கண்ணாடியை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்

இன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும்.
ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
பூண்டு: 

உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது.அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.
கிழங்கு வகை காய்கறிகள்:

உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை காய்கறிகள்: 

உணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள்.ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன.அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.
கிரீன் டீ: 

கிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக்கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.
வெண்ணெய் பழம்: 

வெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்: 

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.
ஆலிவ் ஆயில்: 

ஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.
தானியங்கள்: 

தானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது.அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.
ப்ரோக்கோலி: 

ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ்(glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா?

Star Trek திரைப் படத்தில் காட்டப் படுவது  போல் விண்வெளியில் ஒளியின் வேகத்துக்கு சமீபமாக அல்லது அதை மிஞ்சும் வேகத்தில் பயணித்து நட்சத்திரங்களை அடைவது சாத்தியமே என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது warp drives எனப்படும் எனப்படும் Star Trek உயர் மாடல்கள் கொள்கை அடிப்படையிலும் சில மாடல்கள் செய்முறை அடிப்படை இலும் வருங்காலத்தில் இக்கனவை நிறைவேற்ற உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனத்தின் இலக்குகளை மட்டுப் படுத்துவதற்கு எந்த வரையறையும் கிடையாத நிலையில் ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் கூட நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது பல வருடங்களை அல்லது நூற்றாண்டுகளை அல்லது ஆயிரம் வருடங்களை எடுக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.

பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் பொருள் எதுவுமே இதுவரை இல்லை என்ற போதும் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி வெளியையும் காலத்தையும் வளைத்து அதன் ஓட்டைகளுக்கூடாக (loop holes) ஒளியின் வேகத்தில் பயணிக்கும் விண் ஓடங்களின் பல மாதிரிகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.சார்புக் கொள்கைப் படியும் சில கணிதச் சமன்பாடுகள் கூறுவதன் படியும் warp speed எனும் இயற்கையை வளைத்துச் செல்லும் வேகத்தில் ஒரு சிறிய விண்வெளி ஓடம் பயணிப்பதற்கு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழனின் திணிவுக்குச் சமனான சக்தி தேவைப் படுகின்றது என கூறப்படுகிறது.

நிகழ்காலத்தின் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த வான் பௌதிக விஞ்ஞானியான Miguel Alcubierre , கோள வடிவமான விண்கலம் ஒன்று தனக்கு முன்னே உள்ள வெளியை இணைத்து தனக்குப் பின்னால் விரிவடையச் செய்யும் விதி முறையில் பயணிக்கக் கூடிய விதத்தில் சில கொள்கைகளை முன் வைத்துள்ளார்.குறித்த இவ் விண்கலம் ஒரு கிரகத்திடம் இருந்து அல்லது ஒரு சூப்பர் நோவாவிடம் இருந்து சக்தியைப் பெற்று விண்வெளியில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கத்தை உருவாக்கும் பக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு!!!

சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய "கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.

இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்!

நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.இது இப்போது சூரியனின் வட்டப் பாதையில் 20 லட்சம் மைல் தொலைவில் பர வளையத்தில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரம் சூரியனின் வெளிவட்டப் பாதையில் உள்ள ஊர்ட் பகுதியில் உருவானதாக கருதப்படுகிறது. இங்கு தான் மிக அதிக அளவிலான உறைந்த குப்பை கூளங்கள் உள்ளன.

இந்த வால் நட்சத்திரம் இப்போது வியாழன் கிரகத்தின் உள்வட்டப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது அப்படியே படிப்படியாக பூமியை நோக்கி வரும் என்றும் நம்பப்படுகிறது.அழுக்குகள் நிரம்பிய ஐஸ்பந்தாக சுற்றிவரும் இஸ்கான் வால் நட்சத்திரம் நிலவை விட அதிக ஒளியை உமிழ்ந்தபடி இருப்பதால் இதை பகல் நேரத்தில் வெறும் கண்ணால் காண முடியும். கடந்த நூறாண்டுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இஸ்கான் எரிநட்சத்திரம் அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாலை வேளையில் லண்டனில் தெரியும் என பிரபல வானியல் அறிஞர் ராவின் ஸ்கேகெல் தெரிவித்துள்ளார்.

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

Photo: இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.

நேவார்க் நகர உயர் நிலைப பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது.

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெ
ய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.

நேவார்க் நகர உயர் நிலைப பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...