கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும்
இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.உலக
பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து
வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில்
இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான
கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த
நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டது.இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ்
உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக
பணியாற்றுகிறார்.லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை
ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து
மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள்
நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற
முயற்சிதான்.இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா
கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு,
ஹைட்ரஜன் வாயு உருவாகும்.அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட்
எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட
பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு
குடிநீராக மாற்றப்படுகிறது.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில்
குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ.
செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த
ஆராய்ச்சியின் நோக்கம்.இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி
நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும்.
எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று
கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5
கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச்
சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள்
ஈடுபட்டுவருகின்றனர்.குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு
கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும்,
மணிக்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில்
பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக
நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே
எடுக்கும்.
சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட்
மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின்
நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.ஜப்பானில்
ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின்
திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.இதில் சூரிய ஒளி
மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை
பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த
துங்கியுள்ளது.இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி
செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.
இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு
மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.இது 20 அணு
மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என
கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)இதன்
மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம்
பூர்த்தி செய்து ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.
பஞ்ச பூதங்களில் முக்கியமானது நீர். உலகில் உள்ள ஜீவன்கள்
உயிர்வாழ நீர் மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும்
தெரியும். நீரால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை
அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக தண்ணீர்
என்றால் தாகம் தீர்க்கவும், விவசாய பணிகளுக்கும் அடிப்படை
என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அனைவரும் அறிந்த
தண்ணீரில் பலரும் அறியாத பயன்கள் எத்தனையோ உள்ளன. ஏராளமான
அறிவியல் ஆராய்ச்சிக்கு தண்ணீர் அடிப்படையாக உள்ளது.
பூமியை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டது மட்டுமல்லாமல் வேறு
கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று உள்ளதா? உயிர் வாழ
முடியுமா? என்று விண்வெளி ஆராய்ச்சியை முடுக்கி
விட்டுள்ளான். அதே போல் மனிதனுக்கு அன்றாடம் பயன்தரக்
கூடிய பொருட்களை தயாரிக்கவும் தண்ணீர் ஒரு ஆய்வு பொருளாக
பயன்படுகிறது. அதாவது நீரின் ஆற்றலில் இயங்கும் சிறிய
பேட்டரியை தயாரித்து அமர்க்களப்படுத்தி உள்ளனர். இந்த
வாரம் அந்த பேட்டரியின் சிறப்புகளைப் பற்றி அறிந்து
கொள்வோம்.
எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் சூரியக்கதிர்
ஆற்றல் மற்றும் காற்று இவைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இது
எரிபொருள் மற்றும் மின் சிக்கனத்தைத் தருவதோடு
மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளையும் பாதிக்காமல்இருக்கின்றது. அந்த வகையில் தண்ணீரில் இருந்து மின்சாரம்
பெறப்படுகிறது. அதே போல் தண்ணீர் சக்தியோடு இயங்கும்
பேட்டரியை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை பேட்டரி செல்கள் கார்பன் மூலக்கூறுகளால் மட்டுமே
தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் ஜப்பானிய விஞ்ஞானி சுசுமு
சுசுகி என்பவர் தண்ணீரின் உதவியோடு இயங்கும் நூதன
பேட்டரியை கண்டுபிடுத்துள்ளார். இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் சொட்டு நீர் பாசனம் போன்று ஒரு சொட்டு
நீரிலேயே அதிக ஆற்றல் தரும் வகையில்உருவாக்கபட்டுள்ளது.
அதே சமயத்தில் இது நீண்ட நாள் உழைக்கும் தன்மையைப்
பெற்றுள்ளது. அதிக நாள் ஆற்றலை வெளிவிடக்கூடியது.
சாதாரண பேட்டரியைவிட பத்தில் ஒரு பங்குதான் இதற்கு செலவு
ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பேட்டரி சந்தையில்
புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி கண்டுபிடிப்பாளர்
சுசுமு கூறுகையில், "தண்ணீர் மூலம்
தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த பேட்டரி எதிர்காலத்தில் பிற
கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இருக்கும். சுற்றுப்புற
சீர்கேட்டையும் ஏற்படுத்தாது,'' என்கிறார்.
காலத்தின் வேகமான வளர்ச்சி இயந்திரமனிதன் பூமியில் கால்வைத்து
விட்டான் மனிதனைப் போலவே அனைத்து செயல்களும் எந்த குழப்பமும் இல்லாமல்
சொன்னதை அப்படியே செய்கிறான். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த ரோபோட்
வளர்ச்சியில் தற்போது ஜப்பானில்
சிறப்பு ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இதன் பெயர் நேஒ மற்ற ரோபோட்டில் இல்லாத சிறப்பு இதில் என்ன இருக்கிறது
என்றால் எந்த பக்கமும் சாய்வாக அதேசமயம் நுட்பமாக தன் உடலை எல்லா பக்கமும்
எல்லா கோணத்திலும் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த
பிரச்சினை தான் பெரிதாக இருந்தது.
அது மட்டுமல்ல தரையில் இருக்கும் பொருட்களை அழகாக குனிந்து எடுத்து அதை
குப்பைக்கூடையில் போடும் அரிய சோதனை காட்சியையும் தத்ருபமாக
காட்டியுள்ளனர். கீழே விழுந்தால் எளிதாக எழுந்து விட முடியாது என்ற
நிலையையும் மாற்றி உடனடியாக தன் கைகளை தரையில் வைத்து அழகாக எழுகிறது.
53 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோட் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 2011 ம் ஆண்டு இது விற்பனைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைப்
பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக
மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை
வெளியிட்டுள்ளனர்.
மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர்
சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய்
பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டொரொன்டோ சிறுவர் மருத்துவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிள்கைள் சிறு பொய்களைப் பேசினால் அது குறித்து பெற்றோர் பீதியடையத் தேவையில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொய் பேசும் சகல குழந்தைகளும் எதிர்காலத்தில் மோசமானவர்களாக உருவாக மாட்டார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விளையாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலம் இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில்,
தொழில்நுட்பம் வளர்ந்து சென்றாலும், வளங்கள் மட்டுப்பட்டதாய் இருக்கின்றன.
தற்பொழுது கார் பாவனை அதிகரித்துள்ளது. காரணம் சொகுசுப்பயண மோகமாகும். 4
பேர் பயணிக்க வேண்டிய கார்களில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர்
பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரிபொருள் வீண்விரயம்
ஆக்கப்படுகிறது.இதற்கு தீர்வு சொல்லும் வகையில், கார் போன்ற ஆடம்பரம்,
சொகுசு கொண்ட மோட்டார் சைக்கிளை கண்டிபிடித்துள்ளது அமெரிக்காவின் Lit
Motors நிறுவனம்.இதில் மோட்டார் சைக்கிள் போல் இருவர் பயணிக்கலாம்.
ஏசி முதற்கொண்டு,
காரில் உள்ள அத்தனை அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இவ்வகை மோட்டார்
சைக்கிள்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகவும்
அமையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஒளியினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
பெரும்பாலும் பகலில் நடைபெறும் அனைத்து பணிகளும் சிறப்பாக
நடந்து முடிய சூரியனின் அணுக்கிரகம் மிகவும் அவசியம். அதே
போல் சூரிய ஒளியின் மூலம் ஏராளமான ஆற்றல்கள் நமக்கு
கிடைத்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக சூரிய
ஒளிக்கார்கள், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றைக் கூறலாம்.
சூரிய ஒளியின் மூலம் மின்சார ஆற்றல் என்பது தற்பொழுது
மிகவும் பிரபலமாகி வருகிறது. வருங்காலத்தில் ஏற்படும்
மின்சார பற்றாக்குறையை போக்க நாம் சூரியனை சார்ந்திருக்க
வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உலகம்
முழுவதும் சூரிய வெப்பத்தை முழுமையாக பயன்படுத்தி தேவையான
மின்சாரத்தை எப்படி பெறலாம்? என்பது பற்றி பல்வேறு
ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுப்பதன் முக்கிய
நோக்கம் மாசுக்கட்டுப்பாடுதான்.
இதனால் கார்பன் கழிவு மற்றும் இரைச்சல்கள்
தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆற்றல் தட்டுப்பாடு
நீக்கப்படுகிறது. ஒளியில் கிடைக்கும் ஆற்றல் மூலம் மகத்தான
சாதனைகளை நம் விஞ்ஞானிகள் சாதித்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒன்று, இங்கிலாந்தில் சூரிய ஒளியின் மூலம்
இயங்கக்கூடிய படகு. இதில் அறிவியல் தத்துவங்களின் நவீன
தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. சுமார் 42 பயணிகளை
ஏற்றிச் செல்லும் வகையில் படகை தயாரித்துள்ளனர்.
இந்த
படகு பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும் போது, 'இந்த
ஆராய்ச்சி அதிசயமான ஒன்றுதான். சூரிய ஒளியில் இயங்கும்
எத்தனையோ இயந்திரங்கள் வந்துவிட்டன. இது சற்று
வித்தியாசமான ஒரு கண்டுபிடிப்பு. இது எதிர்காலத்தில் சூரிய
ஒளியில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு
முன்உதாரணம் என்றும் சொல்ல முடியும். வருங்காலத்தில் சிறிய
கப்பல், இதைவிட பெரிய அளவிலான படகுகளை தயாரிக்க இந்த
ஆராய்ச்சி உதவும். இதனால் கடல் போக்குவரத்துக்கு அதிக
அளவில் எரிபொருள்களை பயன்படுத்த வேண்டியதில்லை.
போக்குவரத்து செலவும் பெருமளவில் குறையும். மேலும் மாசுக்
கட்டுப்பாடு ஏற்படுகிறது. தேவையற்ற நச்சுப் புகைகள்
உருவாவது தவிர்க்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புறத் தூய்மை
பாதுகாக்கப்படுகிறது,'' என்றார்.
ஜெர்மனியைச் சேர்ந்த வடிவமைப்பாளரும், விஞ்ஞானியுமான
கிரிஸ்டோப் பெலிங் என்பவர் கூறுகையில், உலகிலேயே இதுதான்
தற்பொழுது மிகவும் அதிநுட்பம் வாய்ந்த படகு. இது
முற்றிலுமாக உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆயுட்காலமும்
கெட்டி. இது எதிர்காலத்தில் உருவாகப்போகும் சூரிய ஒளி
ரயில் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கு
முன்னுதாரணமாக இருக்கும். இதனுடைய அதிகபட்ச பயண தூரம் 82
மைல்கள்.
அதாவது
132 கி.மீட்டர். பயண நேரத்தில் புகை, தூசி போன்றவைகளை
ஏற்படுத்தாது. மேலும் அமைதியான பயணத்தை தரும். ஏனென்றால்
இதில் உள்ள மோட்டார் இயந்திரங்கள் இரைச்சலைக் கூட
ஏற்படுத்தாது. அதாவது கார்பன் கழிவுக்கே வேலையில்லை.
ஏனென்றால் முற்றிலும் இதனுடைய ஆற்றல் சூரிய ஒளியிலிருந்தே
பெறப்படுகிறது. மேலும் அதிக வெயில் இல்லாவிட்டாலும்,மழைக்காலங்களாக இருந்தாலும்கூட ஓரளவு சூரிய ஒளி
இருந்தால் போதும். அதனை உள்வாங்கி இயங்கும் தன்மை
கொண்டது', என்றார் கிரிஸ்டோப் பெலிங். இவர்தான் முதன்
முதலாக உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி படகை தயாரித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
'டீசல் படகுடன் ஒப்பிடும்போது, இது ஆண்டிற்கு 5000 பவுண்டு
கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கிறது' என்கிறார்
மற்றொரு ஆராய்ச்சியாளர் கேவின் கோம்ஸ். இவர் லண்டனைச்
சேர்ந்த ஒரு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
இந்த சூரிய ஒளியில் இயங்கும் படகின் விலை 4 லட்சத்து 21
ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில் சுமார்
ஒரு கோடியே 90 லட்சம் ஆகும். இது சாதாரண டீசல் படகைவிட 20
சதவிகிதம் அதிக விலை கொண்டது. இருந்தாலும் பிற்காலத்தில்
ஏற்படும் சந்தை போட்டியில் இதன் விலை குறையலாம். மேலும்
எரிசக்தியில் இயங்கும் படகுகளைவிட ஏராளமான நன்மைகள் இதில்
கிடைக்கின்றன. இது மணிக்கு 5 மைல்கள் (8 கிலோ மீட்டர்
தூரம்) பயணம் செய்யும் திறன் கொண்டது. இதன் மேற்கூரையில்
பொருத்தப்பட்டுள்ள 27 சூரிய ஒளியை உள்வாங்கும் சட்டம் (Solar
Panel Roof) இந்த படகினை இயக்க தேவையான ஆற்றலை
அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பை பார்த்ததும் புல் பெட்ரோலா? இது என்ன புதுக்கதையாக
இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். இது கதை அல்ல.
அறிவியல் நிஜம். காடுகளிலும், தோட்டங்களிலும் வளரும்
புற்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும்
என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கச்சா
எண்ணையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பிரித்து
எடுக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் அதிக அளவில்
கிடைக்கும் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல்
போன்ற பொருட்களால் சுற்றுப்புற சூழல், காற்று போன்றவை
மாசுபடும் நிலையும் உள்ளது. மேலும் அவற்றின் உற்பத்தியும்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மாற்று எரிபொருள்
உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு
வருகிறார்கள்.
மூலிகையில் இருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் தயாரிக்கலாம்
என்று நம்ம ஊர் ராமர் பிள்ளை சொன்னார். காட்டாமணுக்கு
விதையில் இருந்து இயற்கை டீசல் தயாரிக்க முடியும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை டீசலை பயன்படுத்தி
வாகனங்களை ஓட்டும் முயற்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
மேலை நாடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு
மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய
வாகனங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான்
புற்களில் இருந்து இயற்கை எரிபொருள் மற்றும் மின்சாரம்
தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்து
இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில்
விஞ்ஞானியாக இருப்பவர் டேவிட் டில்மன். இவரும் இவரது
குழுவினரும் சேர்ந்து இயற்கை எரிபொருள் உருவாக்கும்
முயற்சியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
புல் தோட்டம் :
ஏற்கனவே சோயா மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து
இயற்கை எரிபொருள் தயாரிக்க முடியும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. அது போல் வேறு தாவரங்களில் இருந்து
எரிபொருளை இயற்கையாக தயாரிக்க முடியுமா? என்று ஆய்வு
நடத்தினார்கள். அப்போது தரிசு நிலங்களிலும்,
காட்டுப்பகுதிகளிலும் விளையும் புற்களில் இருந்து
மின்சாரமும், இயற்கை எரிபொருளும் தயாரிக்க முடியும் என்பதை
கண்டுபிடித்தனர்.
இந்த இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக இவர்கள்
பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு கார்பன்
நெகடிவ் என்பது பெயராகும். அதாவது சுற்றுப்புறத்தில்
இருந்து உள்இழுக்கப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட,
வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாக
இருக்கும்.
இந்த ஆய்வுக்காக 16 வகையான புல் இனங்கள்
எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இந்திய ரக புல்களும் உண்டு.
இந்த புற்கள் தங்களது இலை, தண்டு மற்றும் வேர் பகுதியில்
அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கும் திறன்
கொண்டது. இதனால் சுற்றுப்புற சூழுலில் இருந்து
உறிஞ்சப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த புற்களில் இருந்து மின்சாரம் மற்றும்
இயற்கை எரிபொருள் தயாரிக்கப்படும் போது வெளிப்படும்
கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாகவே இருக்கும். அதாவது
எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டதோ அதை விட
குறைவான அளவே வெளியாகும்.
தற்போது சோதனை சாலை அளவில் நடைபெற்ற இந்த ஆய்வுகள்
வெற்றியைத்தந்துள்ளன. இவை முழு அளவில் பயன்படுத்தப்படும்
போது பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு கணிசமாக குறையும்,
சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் பாதுகாக்கப்படும்.
`இந்த உலகத்தை விட்டால் மனிதனுக்கு வேறு வாழ்விடமே இல்லை’ என்று மக்கள்
நினைத்துக்கொண்டு இருந்தது எல்லாம் அந்தக் காலம். ஆனால் இப்போதோ, வீடு
கட்டுவதற்கு நிலாவில் இடம் வாங்கலாமா, இல்லை செவ்வாயில் வாங்கலாமா என்று
யோசிக்க தொடங்கிவிட்டார்கள்! மனித
வாழ்க்கைக்கான எல்லைகள் எந்த அளவுக்கு விரிவடைந்திருக்கின்றன என்பதற்கான
ஒரு சிறு உதாரணம்தான் இந்த முன்னேற்றம்.
இதற்கெல்லாம் ஒரேயொரு காரணம்தான். அதுதான் தொழில்நுட்பம் எனும் மாயாஜாலம்!
இந்த மாயாஜாலம் மூலம் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் அட்டகாசமான புதிய பரிசுதான் உயிருள்ள பேட்டரி.
`பேட்டரிகளின் உள்ளே இருப்பது வேதியியல் பொருட்கள்தான். அப்படி என்றால்
பேட்டரிகள் எல்லாம் உயிரற்ற பொருட்களால் ஆனவைதானே?’ என்றுதானே உங்கள்
பொதுஅறிவு சொல்கிறது?
உண்மைதான். பேட்டரி என்றால் அது நிக்கல், கரி உள்ளிட்ட பல வேதியியல்
பொருட்களால் ஆனவை என்றுதான் நாம் படித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டு
இருப்போம். ஆனால் பேட்டரிகளுக்கான இந்த பொதுவிதியை மீறியவைதான் 21-ம்
நூற்றாண்டு பேட்டரிகள். உதாரணமாக, காகிதங்கள் தயாரிக்கப் பயன்படும்
செல்லுலோசால் ஆன நவீன `காகித பேட்டரிகளை’ச் சொல்லலாம்.
இந்த நவீன பேட்டரிகளின் வரிசையில் புதிதாக உருவாக்கப்பட்டு இருப் பதுதான் அதிநவீன `உயிருள்ள பேட்டரிகள்’.
உயிரினங்களின் உடலில் பயோ ப்யூவல் செல் எனப்படும் கருவிகளைப் பொருத்தி,
அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது உயிரினங்களைப் பயன்படுத்தி
மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி. இந்த
யுக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் உயிரினங்களையே `உயிருள்ள
பேட்டரி’ என்கிறார்கள்.
தண்ணீர், காற்று, நிலக்கரி போன்றவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்
என்று படித்திருக்கிறோம். உயிர்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா?
அது சாத்தியமா?
ஆம், சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் நியூயார்க்
நகரிலுள்ள கிளார்க்சன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர்
எவ்ஜெனி காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள்.
இந்தக் குழுவினர் மேற்கொண்ட முந்தைய ஆய்வில், நத்தைகளின் உடலில் இருந்து
மின்சாரம் தயாரிக்க முடியும் என்று செய்து காண்பிக்கப்பட்டது. ஆனால்
இம்முறை, அதற்கும் மேலே ஒரு படி சென்று, சிப்பிகளின் உடலில் இருந்து
தயாரிக்கப்பட்ட மின்சக்தியைக் கொண்டு ஒரு மின்சார மோட்டாரையே
இயக்கியிருக்கிறார்கள் இவர்கள். உயிருள்ள பேட்டரிகளைக் கொண்டு ஒரு மின்சார
மோட்டாரை இயக்குவது உலகில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில், முதலில் சிப்பிகளின் உடலில் உள்ள ரத்தம் நிரம்பிய
பள்ளங்களில் பயோ பியூவல் செல்லின் எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டன. இதன்மூலம்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் இருந்து கிடைக்கும் சக்தியைக் கொண்டு பயோ
பியூவல் செல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, மின்சாரம்
தயாரிப்பதால் குறைந்துபோகும் சிப்பிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள்
மீண்டும் சம நிலைக்கு வர, சிப்பிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஓய்வு
அளிக்கப்பட்டது.
மின்சார மோட்டாரை இயக்குவதற்கு தேவையான மின்சாரம், ஒன்றாக இணைக்கப்பட்ட
மூன்று சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. இதிலுள்ள சீரியல் சர்க்யூட்,
பேட்டரியின் வோல்டேஜை அதிகரிக்க, பாரலெல் சர்க்யூட் மின்சாரத்தை
அதிகரித்தது. ஆனால், இதிலிருந்து தயாரிக்கப்பட்ட மொத்த மின்சாரத்தின் அளவு
சிப்பிகளின் ஆரோக்கியத்தைப் பொருத்து மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று சிப்பி உயிருள்ள பேட்டரி, ஒரு மணி நேரத்திற்கு 29 மில்லி
ஜூல்ஸ் என்ற அளவுகளில் ஒரு கெப்பாசிட்டரை சார்ஜ் செய்தன. அதாவது, ஒரு
மின்சார மோட்டாரின் ஒரு சுழற்சியில் கால்பங்கு சுழற்சிக்கு தேவையான
மின்சாரத்தை உற்பத்தி செய்தன. உதாரணத்துக்கு, ஒரு 75 வாட் பல்பு எரிய ஒரு
நொடிக்கு 75 மில்லி ஜூல்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறதாம்.
மனிதன் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று, அங்குள்ள பல முக்கிய தகவல்களை
சேகரித்துக் கொடுக்கும்படியான மின்சாரக் கருவிகளைத் தாங்கிய உயிரினங்களை
உருவாக்குவதுதான் இந்த மாதிரியான தொழில்நுட்ப ஆய்வுகளின் தலையாய நோக்கம்.
மேலும், இந்த உயிரினங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரேடியோ அல்லது மின்னணுத்
தகவல் சேகரிக்கும் கருவிகளுக்கு தேவையான மின்சாரத்தை, அவற்றின்
உடலிலிருந்தே பெறுவதுதான் இந்த ஆய்வு முயற்சியின் அடிநாதம் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
காட்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அடுத்த கட்ட ஆய்வின் இலக்கு
இறால்கள். ஏனென்றால், ஒரு மின்னணுக் கருவியை பல மணி நேரம் இயக்கும்
அளவுக்கு தேவையான மின்சாரத்தை தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் திறனுள்ள ஓர்
உயிரினத்தை கண்டறிந்து தயார் செய்வதுதான் இந்த ஆய்வு முயற்சியின்
முற்றுப்புள்ளி. இம்மாதிரியான முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில்,
ராணுவம் மற்றும் ஆபத்தில் உதவும் உயிருள்ள வேவு பார்க்கும் கருவிகள் தயார்.
ஆக, இனி நாம் உயிரற்ற ரோபோக்களுடன் சேர்த்து உயிருள்ள வேவு பார்க்கும் கருவிகளையும் பயன்படுத்தலாம். வாழ்க உயிருள்ள பேட்டரிகள்!
தற்போது பல்வேறு விதங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், நமது
மின்சார தேவை மட்டும் இன்னும் முழுமையாக பூர்த்தி அடையவே இல்லை. காரணம்,
மின்சார உற்பத்தி ஆமை வேகத்தில் செல்கிறது. ஆனால் மக்கள் தேவையோ அசுர
வேகத்தில்!
மனிதனின் இந்த தலையாய பிரச்சினைக்கு, மனிதனின் உடலில் இருந்தே ஓர்
அட்டகாசமான வழியை கண்டுபிடித்து அசத்திவிட்டார்கள் வேக் பாரஸ்ட்
பல்கலைக்கழகத்தின் நானோடெக் விஞ்ஞானிகள்.
மனிதனின் உடல் வெப்பத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
திறனுள்ள அந்த அதிசய கண்டுபிடிப்புக்கு `பவர் பெல்ட்’ என்று
பெயரிட்டிருக்கிறார்கள்.
நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய
வெப்ப மின்சார கருவி, வளையும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைபர்களுள்
அடைக்கப்பட்ட நுண்ணிய நானோ குழாய்களால் ஆனது.
இந்த தொழில்நுட்பம் இரு அமைப்புகளுக்கு இடையிலான வெப்ப அளவு
(டெம்பரேச்சர்) வித்தியாசங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி
செய்கிறது.
உதாரணமாக, ஓர் அறையின் வெப்பத்துக்கும் ஒரு மனித உடலின் வெப்பத்துக்கும்
இடையிலான வெப்ப அளவு வித்தியாசத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி
செய்கிறது பவர் பெல்ட்.
இந்த பவர் பெல்ட்டில் சுவாரசியம் என்னவென்றால், இது நாம் உடுத்திக்
கொள்ளும் ஆடைகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு
இருக்கிறது என்பதுதான்.
சாதாரணமாக, உடலிலிருந்து வெப்பமாக வெளியேறி விரயமாகும் சக்தியைக்
கவர்ந்து, மின்சாரம் தயாரிக்கும் பவர் பெல்ட்டின் பலன்கள் ஏராளம் என்கிறார்
ஆய்வாளர் கோரீ ஹெவிட்.
உதாரணமாக,
(1) வாகனங்களின் சீட்களில் பவர் பெல்ட்டை பொருத்தி அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு பாட்டரிகளை சார்ஜ் செய்யலாம்.
(2) கூரையின் டைல்ஸ்களில் பொருத்தி அதில் இருக்கும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டின் கரண்ட் பில்லை குறைக்கலாம்.
மேலும், பவர் பெல்ட்டை பயன்படுத்தி ஒரு வானிலை ரேடியோவை இயக்கலாம், ஒரு
பிளாஷ் லைட்டில் சுற்றி அதனை இயக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, `பவர்
பெல்ட்’டைக் கொண்டு ஒரு செல்போனை சார்ஜ் செய்யலாம்’ என்று
ஆச்சரியப்படுத்துகிறார் நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குனரான டேவிட்
கேரோல்.
முக்கியமாக, மின் விபத்துகள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக
மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் பவர் பெல்ட் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும் என்கிறார் கேரோல்.
மிகவும் அதிக விலை காரணமாக, தற்போது குறைவான எண்ணிக்கையில்
பயன்படுத்தப்படும் வெப்ப மின்சாதனங்கள் பவர் பெல்ட்டின் வருகைக்கு பின்னர்
மிக மிக மலிவாகக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உதாரணமாக, தற்போதுள்ள தரமான வெப்ப மின்சாதனங்களில் வெப்பத்தை மின்சாரமாக
மாற்றப் பயன்படுத்தப்படும் பிஸ்மத் டெல்லூரைடு எனும் வேதியியல் பொருளின்
விலை ஒரு கிலோவுக்கு 1000 டாலராம். அதாவது சுமார் 50 ஆயிரம் ரூபாய்.
ஆனால், பவர் பெல்ட் பயன்பாட்டுக்கு வரும்போது, உடல் வெப்பத்தை கொண்டு
ஒரு செல்போனை சார்ஜ் செய்யும் செல்போன் கவருக்கு தேவையான பவர் பெல்ட்டின்
விலை வெறும் ஒரு டாலராகக்கூட மாறிவிடலாம் என்கிறார்கள்.
தற்போது 72 நானோ குழாய் அடுக்குகளைக் கொண்ட பவர் பெல்ட், சுமார் 140 நானோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஆனால், ஆய்வாளர் கோரீ ஹெவிட்டின் ஆய்வுக்குழு, தற்போதுள்ள பவர்
பெல்ட்டில் மேலும் பல நானோ குழாய் அடுக்குகளை சேர்த்து, அதன் மின்
உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
`தற்போது தொடக்க நிலையில் இருக்கும் பவர் பெல்ட் சந்தைக்கு வர மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த ஆய்வு முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில், ஒரு பவர் பெல்ட்டை
கொண்டு ஒரு ஐ பாடை சார்ஜ் செய்து இயக்கலாம். நீண்ட தூர ஓட்டம்
செல்பவர்களுக்கு பயனுள்ள இது மிக விரைவில் சாத்தியமே’ என்று உறுதியாகச்
சொல்கிறார் ஆய்வாளர் கோரீ ஹெவிட்.
உலகம்
முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல்
போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல்
பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த
போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான
ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம்
தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல்
உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்க்கனவே மின்சாரத்தை தவிர்த்து
ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம்
படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே இதற்காக என்பதால் இந்த
முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES
New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் மொபைலுக்கு சார்ஜ்
போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான பொருட்கள் மீது
இந்த கருவியை வைத்து மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப
ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி மொபைல்களுக்கு சார்ஜ் செய்கிறது.
இந்த கருவி மூலம் செல்போன்கள், MP3
பிளேயர்ஸ், IPOD மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும்
சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும். இந்த கருவி ஏற்கனவே
ஜப்பானில் விலைக்கு வந்தாச்சு. ஆனால் இதன் விலை $299 (Rs. 13,750) மிக
அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த
நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும்
மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan
Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற
கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10
நிமிடத்தில் நம் பொங்கலுக்கு சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45 (Rs.
2000)
இவைகளை மீறி கென்யாவில் மொபைல்
போன்களுக்கு சார்ஜ் போட ஒரு வித்தியாசமான முறையை கையாளுகின்றனர். இவர்கள்
தங்கள் போன்களுக்கு மிதிவண்டிகளை உபயோகித்து எப்படி சார்ஜ் போடுகின்றனர்
என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
ஏற்க்கனவே மின்சார தட்டுப்பாட்டால் உள்ள நம் நாட்டில் இந்த
மொபைல் போன்களுக்கு சார்ஜ் போடுவதாலும் குறிப்பிட்ட அளவு மின்சாரம்
செலவாகிறது. இந்தியா முழுவதும் ஒரு நாள் சார்ஜ் போடுவதால் வீணாகும்
மின்சாரத்தை வைத்து ஒரு பெரிய தொழிற்சாலையை 1 மாதம் இயக்க முடியும் என்று
ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்த முறைகளை அரசு பரிசோதித்து
மொபைலுக்கு சார்ஜ் போட ஏதாவது ஒரு மாற்று வழியை உருவாக்கினால் மொபைல்
போன்கள் மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமித்து பல பயனுள்ள திட்டத்திற்கு
உபயோகித்து கொள்ளலாம்.
Angel Falls in Venezuela
அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி
பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக
கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென்
அமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்”
நீர்வீழ்ச்சியாகும்!
சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன.
இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது.
ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ”
Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள். அப்படியென்றால் ஏன்
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்கிறார்கள் என ஜோசிக்கிறீர்களா?
1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை
தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை
உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின்
நினைவாக இவ் நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.
அன்றும்
இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விடையம்
“ஏலியன்ஸ் ‘aliens) ” எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும். அவ்
வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு.
ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப்பார்த்தாக வேண்டும்.
பரிமாணம்(dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும்
மாமேதையையின் “தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity) ” தொடர்பாக
பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம்
என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…
தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக
கொள்ளப்படுகிறது. அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள
பரிமாணங்கள் இவையே. (இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம்
தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)
சினிமாதுறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.
இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்( இருக்கும் )…. என்பது
விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ
அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.
சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி றீதியிலாவது
ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால்
வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்…. காலம்
தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது. ( எழுத தொடங்கிட்டன் இப்பதான்
விளங்குது… ) இயன்றவரை விளக்குகிறேன். ( தெளிவாக விளக்க தெரிந்தவர்கள் தயவு
செய்து பின்னூட்டம் மூலம் விளக்கவும். பிளீஸ்…)
ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.
நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது.
நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது. எனவே,
இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம்
வித்தியாசப்படிகிறது.
இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…
அதாவது…
ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது
மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது. அதே, காதலி வந்ததும்… அந்த 1
நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது. ( இதை
தான் நமது கவிஞர்களும் திரைப்பட பாடல்களில் அடிக்கடி பயன்படுத்துவார்கள்…
உன்னை காணாத நொடி யுகம் என்றும்… கண்டா யுகம் நொடி என்றும் ஓவர் பில்டப்
கொடுப்பாங்க…)
( இதற்குமேல் என்னால் விளக்க முடியவில்லை… )
சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய (???) வகையில் சொல்ல ரைபண்ணுறன்.
தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி
—————————————————————————————–
—————————————————————————————–
அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் )
எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல
முடியும். அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில்
பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.
இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.
(இதே தியரியில் மறை வேகம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது என்ன வென்றே விளங்கல… விளங்கினவங்க சொல்லித்தாங்க…)
ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது
எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது. ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக
இருக்கும். அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும்.
ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.
2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின்
பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு
போயிருப்பார்கள். ( ஸபா… நினைக்கவே கண்னக்கட்டுது… என்னன்டு தான் அந்த
மனுசன் ஜோசிச்சுதோ…)
ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… ( 3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…
2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்… அது
நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை
பொறுத்தது.
10 வருடகாலப்பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.
நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம்
இதுவும் இறுதிவேகம் தான்… சராசரிவேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன்
பயணிக்க உகந்ததல்ல…
சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).
ஆகவே… எமது வாழ்னாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….
( பேந்து ஏன் இதை எழுதுராய்… என சிலர் கேட்பார்கள்… ஹி… ஹீ…. நான் இந்த
தியரியை வைத்து தான் எல்லாத்தையும் சொல்ல ரைபண்ண போறன். அதுக்கு தான் இதை
சொன்னன். ஆனால், எழுதுறதுல ஒரு இடத்துலயும் பொய் என்றோ… லொஜிக் இல்லாமல்
இருக்கு என்றோ நீங்கள் நினைக்கும்படி எழுத மாட்டன்… )
சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை…. அதால… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் (???)…
இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளைதனமானது.
இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள எமக்காக (பூமிக்காக)
மட்டும்தான் படைக்க (???) பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.
ஆகவே… எம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.
இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எளலாம்…
எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்)
அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி
எலலாம். ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது… வேற்று கிரக
வாசிகளும் எம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே…
அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும். அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை
நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே!!!
எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…
ஆனால்…
நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா??? அல்லது…
எத்தனையோ
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தற்போது பேட்டரியால் இயங்கும் வகையில்
தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மிக
முக்கியமான சாதனமான அயர்ன் பாக்ஸ் என்றழைக்கப்படும் இஸ்திரி பெட்டி மட்டும்
இன்னமும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தான் தயாரிக்கப்படுகின்றது. அதை
மட்டும் ஏன் பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கவில்லை? என்ற கேள்வி
எனக்குள் நிறைய தடவை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்விக்கும் பதிலளிக்கும்
வகையில் பேட்டரியால் இயங்கும் அயர்ன் பாக்ஸ் விற்பனைக்கு வந்திருக்கிறது.
இங்கல்ல. வெளிநாடுகளில் தான். இதன் பெயர் Playazon என்ற வலைதளத்தில்
ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். விலை கொஞ்சம் அதிகம்தான்.
இந்த அயர்ன் பாக்ஸ் 12V , 14.5V அல்லது 18V பேட்டரியால் இயங்கும். இந்த
பேட்டரியால் சூடாகும் அயர்ன் பாக்ஸைக் கொண்டு சுமார் 1 அல்லது 4
நிமிடங்கள் வரை(அவரவர் வசதிற்கேப்ப நிமிடங்களை மாற்றிக் கொள்ளலாம்) துணிகளை
அயர்ன் பண்ணலாம்.
உலகம்
முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆராய்ச்சிகளும் நடந்து
வருகின்றன. வேகமாக காரில் செல்லும்போது திடீரென யாராவது குறுக்கே
வந்துவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது... ஆனால், கார் மட்டும் ஓடி மோதி
விபத்தை ஏற்படுத்திவிடும். சிலர், பரபரப்பில் பிரேக்குக்கு பதில்
ஆக்ஸிலேட்டரை மிதித்துவிடுவார்கள். சில நேரங்களில் பிரேக் பெயிலியர்
ஆகிவிடும். ‘நான் எவ்வளவோ பிரேக்கை அழுத்தினேன். ஆனா, வண்டி நிக்கலையே’
என்று நொந்துகொள்பவர்களும் உண்டு.
விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய டெக்னாலஜி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி, காரின் குறுக்கே யாராவது வந்தால் பிரேக்கை
அழுத்த வேண்டி இருக்காது. கார் தானாகவே நின்று விடும். இந்த புதிய
டெக்னாலஜி யை தனது எஸ்60, வி60, எக்ஸ்சி60 ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தி
இருக்கிறது ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம்.
வால்வோ நிறுவன
ஆராய்ச்சியாளர்களின் சாதனை கண்டுபிடிப்பு இது. இதன் செயல்பாடு குறித்து
ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்ததாவது: விபத்து மற்றும் உயிர் பலியை
தடுக்கும் வகையில் கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட
கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள கேமரா மற்றும் சென்சார் கருவி, கார் வேகமாக சென்று
கொண்டிருந்தாலும் குறுக்கீடு ஏதாவது வந்தால் தானாகவே இன்ஜினை ஆப்
செய்துவிடும். ரேடார்களின் துணையோடு இது சாத்தியமாகும். ரேடார் சமிக்ஞைகளை
பெற்றதும் சென்சார் மூலம் காரில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பி ஓட்டுனரை
எச்சரிக்கும். காரும் தானாக நின்றுவிடும்.
இந்த செயல்பாடு இரவு மற்றும் வானிலை பாதிக்கப்படும் நேரங்களில் செயல்படாது.
வாகனங்களில் எத்தகைய முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டாலும்
டிரைவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தையும்
வலியுறுத்தி உள்ளனர்.
ஹேக்கிங் தீய செயல்பாடுகளுக்கு மட்டும் அல்ல..நான் என் தோழன் அனபரசன் மற்றும் சிலருடன் விவாதிப்பதும் இதை பற்றிதான் . இதை நல்ல வழியிலும் பயன் படுத்த இயலும். திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட்
ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில்
நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை,
பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம்
செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன
ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக
வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள்
ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை
முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு
பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி
சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில்
அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ்
என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி.
www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார்.
பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட்
ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.
என் இனிய தமிழ் மாணவர்களே! ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty”
எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின்
புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து
அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள்
கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை
இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள்
இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான்
தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத்
தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான்
கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும்
கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.
தொலைவிலிருந்தும்
நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே
நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால்
செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள்.
இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது கோபால் இதில் அதிகம்
செய்யமுடிவதால் இதை அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும்
சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
இந்த
ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம் தாங்க முடிகிறதில்லை. இதைக்கொண்டு
என்ன செய்யமுடியும் என்பதைவிட என்னசெய்ய முடியாது என்பதை
கண்டுபிடிப்பதுதான் மிகக் கஷ்டம்.
முதலில் சுட்டெலி தேவையில்லை.
அதாங்க கணிணி மவுஸ் தேவையில்லை. உங்கள் போனையே மவுசாக பயன்படுத்தலாம்
என்றார்கள். அருமையாக வேலை செய்தது. முக்கியமாக டிவியில் மடிக்கணிணி திரையை
பார்த்தபோது. Mobile Air Mouse
இப்போது
வீட்டிலிருக்கும் ரிமோட்டுகளையெல்லாம் கொண்டு போய் குப்பையில் போடுங்கள்.
எல்லா ரிமோட்டையும் உங்கள் கைப்பேசியே பார்த்துக் கொள்ளும் என்கின்றார்கள்.
டிவியில் சேனல் மாத்துறது முதல் DVR, DVD பிளயரையெல்லாம் கைப்பேசி கொண்டு
இயக்கலாமாம். Redeye
போதாக்குறைக்கு
கார் கீயையும் தொட்டுவிட்டார்கள். இந்த கைப்பேசி கொண்டே வாகனத்தை ஸ்டார்ட்
செய்யலாம், ஆஃப்செய்யலாம், கதவை திறக்கலாம், பூட்டலாம். இப்படி
நீள்கின்றது லிஸ்ட். அதுவும் எவ்வளவு தூரத்திலிருந்தும் செய்யலாமாம்.
எல்லாம் இணையம் வழி அல்லவா? Viper Smartstart
இன்னொரு
கும்பல் உங்கள் கைப்பேசி கேமராவில் நீங்கள் பிடிப்பவற்றை அப்படியே லைவ்வாக
இணையத்தில் ஒளிபரப்பவும் வசதி செய்துதந்திருப்பது ஏற்கனவே உங்களுக்கு
தெரிந்திருக்கலாம். Ustream.tv
அது
மட்டுமா, வீட்டிலிருக்கும் ஹீட்டரை அல்லது ஏர்கண்டிசனரை தூரத்திலிருந்தே
உங்கள் கைப்பேசி வழியே கட்டுப்படுத்தவும் இப்போது வழிகொண்டு
வந்திருக்கின்றார்கள். Ecobee
அப்படியே
வீட்டிலிருக்கும் பாதுகாப்பு அலாரத்தையும் அறைவாரியாக ஆன் செய்ய அல்லது
ஆஃப் செய்ய உங்கள் கைப்பேசி மட்டும் போதும். அதுவும் ஆயிரக்கணக்கான மைல்கள்
தொலைவிலிருந்தே செய்யலாம். e-Secure
இப்படி
இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகின்றது. இப்போதைக்கு மெத்தவசதியாக இவை
கிடைக்காவிட்டாலும் இன்றைய கணிப்பேசிகள் போகும் போக்கை நம்மால் ஓரளவுக்கு
யூகிக்க முடிகின்றது. கொஞ்சகாலத்தில் பெரும்பாலான எல்லா சின்ன சின்ன
கொத்துச் சாவிகளையும் திறப்புகளையும் ரிமோட்டுகளையும் டெபிட்/கிரெடிட்
கார்டுகளையும் கைப்பேசிகளே பார்த்துக்கொள்ளும் போலிருக்கின்றது.
சுவிச்சு போட்டா லைட்டெரிய வைக்கும் போன்ற
சுவிட் தாயாரிப்பவர்களும் வேறுவேலை தேடவேண்டியிருக்கும். வீட்டு
மின்விளக்கு கட்டுபாடுகளெல்லாம் 2013-ல் கைப்பேசியில் வந்துவிடுமே.சுவிட்ச்
எதற்கு?
தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் அயல்நாட்டிலிருந்து
தமிழ்நாட்டில் பாச்சலர்ஸ் டிகிரிகள், மாஸ்டர்ஸ் டிகிரிகள் என பல்வேறு பட்ட
படிப்புகள் படிக்க வசதிகள் செய்து தந்துள்ளன. எந்த பல்கலைக்கழகங்கள் எந்தெந்த நாடுகளில் ஸ்டடி செண்டர்கள், எக்சாம் சென்டர்கள் வைத்துள்ளன என கீழே நீங்கள் காணலாம்.
University
Institutions from Tamilnadu providing distance education for Non
Resident Indians with Exam/Study centers in abroad .
உலகின் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற பெரிய 50 நிறுவனங்களின் பெயர்கள் தோன்றியது எப்படி என விளக்கும் படங்கள் இங்கே எனது சேகரிப்புக்காக.
Adidas name origin
Ikea store name origin
Duanereade name origin
Adobe name origin
Wendys name origin
Mattel name origin
Geico Insurance company name origin
Sharp name origin
Virgin Records name origin
Lego name origin
Audi car company name origin
Seven Elevan name origin
Ebay corporate name origin
Vodafone name origin
KIA cars name origin
Nokia cellphone company name origin
Qualcomm Telecommunication company name origin
SEGA name origin
Reebok name origin
IBM corporation name origin
Nintendo name origin
Tacobell name origin
Canon name origin
Nabisco name origin
Amazon.com name origin
Sprint name origin
CVS Pharmacy name origin
Walmart store name origin
Garmin name origin
Coca Cola name origin
Pepsi name origin
SAAB technologies name origin
Hasbro name origin
ConocoPhillips name origin
Verizon name origin
Comcast name origin
3M name origin
QVC name origin
Bridgestone name origin
H&R Block name origin
Volkswagen name origin
Arbys name origin
AT&T name origin
Starbucks name origin
AMC Theatres name origin
Nissan name origin
Arm & Hammer name origin
Sony name origin
Nikon name origin
ATARI Games name origin
How corporate names came, How big companies are named, How famous companies got their names.